12704 – கட்டியம்: உலகத் தமிழர் அரங்க ஆய்விதழ். தொகுதி 1-எண்3: அக்டோபர்-டிசம்பர்-2002.

அன்ரன் பொன்ராஜா (நிர்வாக ஆசிரியர்), வீ.அரசு (சிறப்பாசிரியர்).
சுவிட்சர்லாந்து: தமிழ் நாடகக் கல்லூரி, சுவிஸ், இணை வெளியீடு, தமிழ்நாடு:
விறல் அறக்கட்டளை, 1வது பதிப்பு, டிசம்பர் 2002. (சென்னை: கணேசமூர்த்தி,
ஜோதி என்டர்பிரைசஸ்).

175 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24 x 18.5 சமீ.

கட்டியம் உலகத் தமிழர் அரங்கியல் ஆய்விதழின் ஆசிரியர் குழுவில் இலங்கையிலிருந்து கா.சிவத்தம்பி, சி.மௌனகுரு, குழந்தை ம.சண்முகலிங்கம் ஆகியோரும், தமிழகத்திலிருந்து ந.முத்துசாமி, கவிஞர் இன்குலாப், ஓவியர்ட்ராஸ்கி மருது ஆகியோரும், புகலிடத்திலிருந்து ஏ.சி.தாசீசியஸ், இளையபத்மநாதன், மக்கின் ரையர் ஆகியோரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இவ்விதழில் தலையங்கம் (பண்பாட்டு நிறுவனங்களும் அரசுசார் செயல்பாடுகளும்), ஆய்வுக் கட்டுரைகள்(வாழ்க்கைஇ சடங்கு, மேடை ஆகியவற்றில் பாவனை: பாவனை நடனம், பாவனை நாடகம்/ஆ.தனஞ்செயன், புலம்பெயர் நாடுகளில் தமிழ் நாடக ஆற்றுகை/க.ஆதவன், புலம்பெயர்ந்த கலைகளின் மூலக்கருத்து புலம்பெயராமல் இருக்கமுடியுமா?/குலசேகரம் சஞ்சயன்), உரையாடல் (ஈழத்தின் அரங்கம்/கா.சிவத்தம்பி)/ நாடக விமர்சனம் (அம்மையே அப்பா ஒப்பில்லா மணியே: உபகதை/ந.இரவீந்திரன், பனித்தீ/இரவிவர்மா)/ நூல் விமர்சனமும் அறிமுகமும் (நாடகமேடை நினைவுகள்/பம்மல் சம்பந்த முதலியார்), ஆவணம் (நாடகத் தடைச் சட்டம்/வீ.அரசு, கீமாயணம், எம்.ஆர்.ராதா), நாடகப் பிரதி (தனு/இளைய பத்மநாதன், அம்மையே அப்பா ஒப்பில்லா மணியே/யோகராசா), பதிவு (கிழக்கிசை குறித்த கட்டுரைகள்/செ.யோகராசா, வ.இன்பமோகன், பட்டமளிப்பு விழா உரை/அ.மங்கை) ஆகிய எட்டு பிரிவுகளில் இவ்வாய்விதழின படைப்பாக்கங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32148).

ஏனைய பதிவுகள்

17965 அச்சுவேலி பெருநகர்.

இளையதம்பி சிவயோகநாதன். மொறட்டுவை: இ.சிவயோகநாதன், B30/3/2/, சொய்சாபுர தொடர்மாடி, 1வது பதிப்பு, மே 2013. (கொழும்பு 6: R.S.T.Enterprises Pvt Ltd, 114, W.A. சில்வா மாவத்தை). 61 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

Free Spins No Deposit Uk 2024

Content Cleopatras Gold free spins 150 – Free Spins On Your Birthday Big Bonuses Up To 100 No Deposit No Wagering Spins At The Phone