12707 – சோஃபகிளிஸின் மன்னன் ஈடிப்பஸ்.

சோஃபகிளீஸ் (கிரேக்க மூலம்), குழந்தை
ம.சண்முகலிங்கம் (தமிழாக்கம்), நாகேந்திரம் நவராஜ் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

viii, 238 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22 x 14.5 சமீ., ISBN: 978-955-659-585-7.

சோஃபகிளீஸ் எழுதிய அவலச் சுவை கொண்ட கிரேக்க நாடகமான மன்னன் ஈடிப்பஸ் E.F.Watling அவர்களால் ஆங்கிலத்தில் King Oedipus by Sophocles என்ற தலைப்பில் எழுதப்பட்டது. இந்நாடகத்தின் ஆங்கிலவழித் தமிழாக்கமும் அது தொடர்பான பல்வேறு கட்டுரைகளும் கொண்ட தொகுப்பே இந்நூலாகும். விதியின்கைகளில் ஆட்டுவிக்கப்படுகின்ற மனித அவலம்தான் இந்நாடகத்தின் தொனிப்பொருள். இந்நூல் சோஃபகிளீஸ்- கிரேக்கத்தின் சத்துச்சாறு, சோஃபகிளீஸின் மன்னன் ஈடிப்பஸ் நாடகம் (பக்கம் 17-107), நாடக எழுத்துருவொன்றினைப் புரிந்துகொள்ளல், மன்னன் ஈடிப்பஸ் நாடகம் பற்றியதொரு பருமட்டான பார்வை, மன்னன் ஈடிப்பஸ் நாடகத்தின் சூழ்வும் கட்டமைப்பும், மன்னன் ஈடிப்பஸ் நாடகத்தின் கருக்களும் கருத்துக்களும், மன்னன் ஈடிப்பஸ் நாடகப் பகுப்பாய்வு, மன்னன் ஈடிப்பஸ் நாடகத்தை விளங்கிக்கொள்ளச் சில வினாக்களும் விடைக் குறிப்புக்களும், அவலச்சுவை: சில அறிஞர்களின் கருத்துக்கள், கிரேக்க அரங்குபற்றிய ஒழுங்கு முறை சாராத பொதுப்பார்வை ஒன்று, பிற்சேர்க்கை- குழந்தை ம.சண்முகலிங்கத்தின் நாடக எழுத்துருக்கள் ஆகிய 11 ஆக்கங்களை இந்நூல் உள்ளடக்குகின்றது

ஏனைய பதிவுகள்

Rolluiken rock climber bonus Laten Geplaatst

Capaciteit Sangaré Nog Altijd Psv’er: “diegene Ben Immers Zeker Kort Wondertje, Ja” Hazard: “zondag Contra Feyenoord, Dit Ben Eentje Mooie Binnenkome” What Bedragen Microneedling At

14763 கும்பிட்ட கையுள்ளும் கொலைசெய்யும் கருவி (நாவல்).

ஆ.மு.சி.வேலழகன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2015. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி). 217 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5