12710 – நாடகமும் அரங்கியலும்: 2015 புதிய படத்திடத்துக்கு அமைவானது-தரம் 10.

சு.சந்திரகுமார். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xvi, 155 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 375., அளவு: 21.5 x 14.5 சமீ., ISBN: 978-955-659-468-3.

இந்நூல் 2015ஆம் ஆண்டில் தரம் 10இற்கான நாடகமும் அரங்கியலும் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டது. நாடகம், அரங்கு தொடர்பான பல விடயங்கள் மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் எடுத்துக்காட்டுகளுடனும் இந்நூலில் விபரிக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் மிகப் பொருத்தமான விளக்கப்படங்கள் தரப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்குக் கைந்நூலாகவும் மாணவர்களுக்குப் பாடப்புத்தகமாகவும் அமையத்தக்க வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் நுண்கலைத்துறையில் நாடகமும் அரங்கியலும் பாடத்தைக் கோட்பாட்டுரீதியாகவும், செயல்முறைரீதியாகவும் கற்பிக்கும் விரிவுரையாளராவார்.

ஏனைய பதிவுகள்

16915 மரியசேவியம்: கலைத்தூது அருட்கலாநிதி நீ.மரிய சேவியர் அடிகளாரின் முதலாம் ஆண்டு நினைவு மலர்.

கி.செல்மர் எமில் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2022. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். கிராப்பிக்ஸ், 54, இராஜேந்திரா வீதி). vii, 186 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: