12711 – நாடகமும் அரங்கியலும் : 2016 புதிய படத்திடத்துக்கு அமைவானது-தரம் 11.

சு.சந்திரகுமார். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

viii, 128 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21 x 14 சமீ., ISBN: 978-955-659-488-1.

இந்நூல் 2016ஆம் ஆண்டில் தரம் 11இற்கான நாடகமும் அரங்கியலும் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டது. இதில் நாடக அரங்கக்கலைகள், அதன் கூறுகளான நெறியாழ்கை, நாடகத் தயாரிப்பு, அரங்கக்காட்சியமைப்பு, அரங்க இசை விதானிப்பு, அரங்கிற்கான அசைவியக்கம், வேடஉடை விதானிப்பு, நாடக ஒப்பனை, அரங்க ஒளி விதானிப்பு, நாடகத்தில் பார்ப்போர், ஊமச்சித்திரிப்பு, அரங்கப் பயிற்சிகள் என்பனவும் நாடகம்சார் சடங்குகள், பாரம்பரியக் கூத்து, ஈழத்துத் தமிழ் நாடக ஆளுமைகள், சிங்கள நாடக அரங்கு என்பனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. விதிக்கப்பட்ட நாடகபாடமான ‘புதியதொரு வீடு” நாடகப் பகுப்பாய்வும் அதன் கரு, கதை, அதில்வரும் பாத்திரங்கள், அதில் வெளிப்படும் சமகால அரசியல் பொருளாதாரவிடயங்கள் என்பனவும் தரப்பட்டுள்ளன. புதியதொரு வீடு நாடகம் ஆற்றுகைநிலையடையும்போது வெளிப்படும் விடயங்கள், இதன் நாடகப் பாணி என்பனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. மாணவர்கள் செய்முறைப் பரீட்சையில் சித்தியடைவதற்கு அப்பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களும், எழுத்துப் பரீட்சைக்கான மாதிரிவினாத்தாள்களும் தரப்பட்டுள்ளன. நூலாசிரியர் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் நுண்கலைத்துறையில் நாடகமும் அரங்கியலும் பாடத்தைக்கோட்பாட்டுரீதியாகவும், செயல்முறைரீதியாகவும் கற்பிக்கும் விரிவுரையாளராவார்.

ஏனைய பதிவுகள்

13026 இலங்கையில் ஊடகவியல்.

தம்பிஐயா தேவதாஸ். கொழும்பு 13: வித்தியாதீபம் பதிப்பகம், 90/9, புதுச் செட்டித் தெரு, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 13: சன் பிரின்டெக்).x, 100 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 18.5×13 சமீ.,

14651 முகை விடும் மொட்டுக்கள் (கவிதைத் தொகுப்பு).

எம்.ரஸ்லான் ராஸீக். கொழும்பு 6: இலங்கை தமிழோசை இணைய வானொலி, 10 ½, 42ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2011. (மாவனல்ல: ஸ்மார்ட் அச்சகம்). xiv, 57 பக்கம், விலை: ரூபா 130.,

14344 முள்ளிவாயக்கால் பதிவுகள் Stories of Mullivaikkaal.

அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம். யாழ்ப்பாணம்: அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம், இல. 70, மணல்தரை ஒழுங்கை, திருநெல்வேலி, 1வது பதிப்பு, மே 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). 126 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

12385 – சிந்தனை: மலர் 1 இதழ் 1 (ஏப்ரல் 1967).

கா.இந்திரபாலா (பதிப்பாசிரியர்). பேராதனை: சிந்தனை வெளியீடுகள், பேராதனைக் கலைக் கல்விக் கழகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1967. (கண்டி: செய்தி அச்சகம், 241, கொழும்பு வீதி). 48 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 1.,

12842 – தேம்பாவணி இரட்சணிய யாத்திரிகம் இயேசு புராணமாதிய மூன்று கிறித்தவ இலக்கிய நூல்களின் நூல் ஆராய்வு.

ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா. செல்வராஜகோபால்). கனடா: சீவன் பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd,Mississauga L5V1S6, Ontario,1வது பதிப்பு, 2009. (கனடா: ரீ கொப்பி, டொரன்டோ). xxxviஇ 312 பக்கம்,