சு.சந்திரகுமார். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
viii, 128 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21 x 14 சமீ., ISBN: 978-955-659-488-1.
இந்நூல் 2016ஆம் ஆண்டில் தரம் 11இற்கான நாடகமும் அரங்கியலும் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டது. இதில் நாடக அரங்கக்கலைகள், அதன் கூறுகளான நெறியாழ்கை, நாடகத் தயாரிப்பு, அரங்கக்காட்சியமைப்பு, அரங்க இசை விதானிப்பு, அரங்கிற்கான அசைவியக்கம், வேடஉடை விதானிப்பு, நாடக ஒப்பனை, அரங்க ஒளி விதானிப்பு, நாடகத்தில் பார்ப்போர், ஊமச்சித்திரிப்பு, அரங்கப் பயிற்சிகள் என்பனவும் நாடகம்சார் சடங்குகள், பாரம்பரியக் கூத்து, ஈழத்துத் தமிழ் நாடக ஆளுமைகள், சிங்கள நாடக அரங்கு என்பனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. விதிக்கப்பட்ட நாடகபாடமான ‘புதியதொரு வீடு” நாடகப் பகுப்பாய்வும் அதன் கரு, கதை, அதில்வரும் பாத்திரங்கள், அதில் வெளிப்படும் சமகால அரசியல் பொருளாதாரவிடயங்கள் என்பனவும் தரப்பட்டுள்ளன. புதியதொரு வீடு நாடகம் ஆற்றுகைநிலையடையும்போது வெளிப்படும் விடயங்கள், இதன் நாடகப் பாணி என்பனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. மாணவர்கள் செய்முறைப் பரீட்சையில் சித்தியடைவதற்கு அப்பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களும், எழுத்துப் பரீட்சைக்கான மாதிரிவினாத்தாள்களும் தரப்பட்டுள்ளன. நூலாசிரியர் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் நுண்கலைத்துறையில் நாடகமும் அரங்கியலும் பாடத்தைக்கோட்பாட்டுரீதியாகவும், செயல்முறைரீதியாகவும் கற்பிக்கும் விரிவுரையாளராவார்.