12712 – பெருநதியின் புதிய கிளை: வித்தியானந்தன் பாணியிலான மரபுவழி நாடக மரபு.

சுந்தரலிங்கம் சந்திரகுமார். மட்டக்களப்பு: விமோசனா வெளியீடு, 42ஃ15, ஐந்தாம் குறுக்குத் தெரு, இருதயபுரம் மேற்கு, 1வது பதிப்பு, ஜுன் 2009. (மட்டக்களப்பு: வணசிங்கா பிரிண்டர்ஸ்).

xxii, 110 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5 x 15 சமீ., ISBN: 978-955-51736-2-9.

ஈழத்துக் கூத்தும் வித்தியானந்தன் பாணியிலான நாடக வடிவமும், வித்தியானந்தன் பாணி உருவாவதற்கான காலச்சூழல், மட்டக்களப்பு மாவட்டப் பாடசாலைகளில் வித்தியானந்தன் பாணியிலான நாடகத்தின் அறிமுகமும் 1990களின் முன் அதன் செயற்பாடுகளும், 1990களின் பின் மட்டக்களப்பு மாவட்டப் பாடசாலைகளில் வித்தியானந்தன் பாணியிலான நாடகச் செயற்பாடுகள், பாடசாலைக் கூத்துக்கள் பற்றிய மதிப்பீடு ஆகிய ஐந்து இயல்களில் இவ்வாய்வு எழுதப்பட்டுள்ளது. சுந்தரலிங்கம் சந்திரகுமார் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் சிறப்புமிக்க மாணவர்களுள் ஒருவர். பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் அரங்கியல்துறையில் அதீத ஈடுபாடு கொண்டவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 51329).

ஏனைய பதிவுகள்

14481 முகவரிகள்: தமிழ்மொழி மூல பயிற்சிபெற்ற பட்டதாரிகள்.

T.குகதாஸ், S.றஸ்மி (இதழாசிரியர்கள்). கொழும்பு 12: தமிழ்மொழி மூல பயிற்சிபெற்ற பட்டதாரிகள், கொழும்பு கச்சேரி, டாம் வீதி, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 6: டெக்னோ பிரின்டர்ஸ், 581, 2/1, காலி வீதி, வெள்ளவத்தை).