12713 – மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய திருக்குற்றாலக் குறவஞ்சி.

அம்மன்கிளி முருகதாஸ், க.திலகநாதன் (பதிப்பாசிரியர்கள்). வல்வெட்டித்துறை: ஜனனி
வெளியீட்டகம், புது வளவு, பொலிகண்டி, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½, டாம் வீதி).

x, 125 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5 x 14 சமீ.

திரிகூடராஜப்ப கவிராயர் என்பவரால் இயற்றப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கு நாடகமும் அரங்கியலும் பாடத்திற்கான பாடநூல்களுள் ஒன்றாக வைக்கப்பெற்றுள்ளதுடன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலக்கியமாகவும் நாடக எழுத்துருவாகவும் கற்பிக்கப்படுகின்றது. திருக்குற்றாலக் குறவஞ்சி புதிய பதிப்பெதுவும் வெளிவராத நிலையில் மாணவர்களின் கல்வித்தேவைகளுக்காக எளியவடிவில் இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதன் உரை திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகப்பதிப்பை அடியொற்றியது. நாடக நோக்கிலான அறிமுகத்துடன் கூடியது. கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை முதுநிலை விரிவுரையாளராவார். திரு.க.திலகநாதன் யாழ்ப்பாணம் தேசியக்கல்வியியற் கல்லூரியின் நாடகஃஅரங்கியல் துறையின் விரிவுரையாளராவார்.


மேலும் பார்க்க: 13யு03,12489,12529,12532,12721

ஏனைய பதிவுகள்

12026 – இந்து நாகரிகம்: பாகம் 3.

க.சொக்கலிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1997. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, B.A.தம்பி லேன்). xi, 216 பக்கம், விலை: ரூபா 140.00,