செ.ஜோர்ஜ் இதயராஜ், நிழல் எட்வேட் சந்திரா (தொகுப்பாசிரியர்கள்). கனடா M5S 2W9: ஜீவா பதிப்பகம், ரிப்ளக்ஸ் அச்சகம், 1108, பே வீதி, தொரன்ரோஇ 1வது பதிப்பு, ஐப்பசி 1993. (கனடா M5S 2W9: ஜீவா பதிப்பகம், ரிப்ளக்ஸ் அச்சகம், 1108, வே வீதி, தொரன்ரோ).
xxxii, 314 பக்கம், புகைப்படங்கள், விலை: கனேடிய டொலர் 20., அளவு: 21.5 x 14 சமீ.
திரைப்படங்களின் கதைச்சுருக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இதில் ஒரு வருடத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்புக் கணிப்பு 1982, 1941இல் வெளிவந்ததொரு பட விளம்பரம், தேசிய விருது நடுவர் குழு, தமிழ்த் திரைப்படக்கலைஞர்களின் பிறந்த தினம், இலங்கையில் தயாரான தமிழ்ப் படங்கள், தமிழக அரசின் விருதுபெற்ற படங்கள் 1967-1993, மௌனப் படங்கள் 1913-1932, தமிழக அரசின் விருதுபெற்ற நடிகர்கள், நினைவு விருதுகள், இந்திய வானொலி ஒலிபரப்பின் ஆரம்பம், இந்தியத் தொலைக்காட்சியின் ஆரம்பம் போன்ற தகவல்களும் தரப்பட்டுள்ளன. இத்தொகுப்பில் திரைப்படத்துறையின் அத்திவாரம் இலக்கியம் வரலாறு, திரைப்படத்துறை வழக்குகள், திரைப்படங்களின் போக்கைக் கண்காணிக்கும் தமிழ்ப் பத்திரிகைகள், திரைப்படக் காட்சிப் படங்களின் பெயர் அகரவரிசை, திரைப்படக்காட்சிகளில் தோன்றும் நடிகர் பெயர் வரிசை ஆகிய பட்டியல்களும் மேலதிகமாக இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14589).