12715 – திரைப்பட விழாக்களின் படங்களும் அவை தொடர்பான சுவையான செய்திகளும்.

கே.எஸ்.சிவகுமாரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2017. (சென்னை 94: ஆதிலெட்சுமி கிராஃபிக்ஸ்).

xxii, 196 பக்கம், இலங்கை விலை: ரூபா 300., அளவு: 17.5 x12 சமீ., ISBN: 978-93-86031-62-4.

இந்நூலில் திரைப்படத் திறனாய்வுஇ ‘டொக்யூமென்டரி” என்றால் என்ன?, திரைப்படக்கலை பற்றிய தமிழில் ஒரு அருமையான நூல், தென்னிந்தியத் திரைப்படங்கள், கல்கத்தா திரைப்பட விழாவில் குறிப்பிடத்தக்க படங்கள், இரு சிங்கள நெறியாளர்கள், மெல்லெனக் காமத்தைத் தீண்டும் ஐரோப்பியப் படங்கள் இரண்டு, மேலை இசை விற்பன்னர், கன்னட சினிமா, கன்னட சினிமா: க்ரிகஸ்ஸரவல்லி (க்ரௌர்யா-கன்னடம்), மலையாள சினிமா: ஜி.அரவிந்தனின் படங்கள், நான்கு மலையாளத் திரைப்படங்கள், அஸ்ஸாமிலிருந்து ஓர் அழகிய பெண்ணியப் படம், ஹிந்தி சினிமா பிக்ரம் சிங்கின் படம், தமிழ் சினிமா பூமணியின் படம், சிங்கள சினிமா எச்.டீ. பிரேமரத்னவின் படம், சம்ஸ்கிருதமொழி சினிமா: ஜி.வி.ஐயர், இந்திய சினிமா: பெண் நெறியாளர்கள், பம்பாய்படவிழா: பெண் நெறியாளர்கள், பல மொழிகளின் பட நெறியாளர்: ஷியாம் பெனிகல், பன்மொழி நடிகை: ஸ்மிதா பட்டேல் (மராட்டி), இந்திய சினிமா: திரைப்படங்கள் சில, குறுந்திரைப்படங்கள்: பி.லெனின் (கா.சிவபாலன்), பிரிட்டிஷ் சினிமா: அயர்லாந்து நடிகர், கனேடிய சினிமா: ஜேம்ஸ் கமரூன், உலக சினிமா: பல்வெற வெளிப்பாடகள், உலக சினிமா: காமஞ்சார்ந்த படங்கள், உலக சினிமா: மேலும்சில படங்கள், உலக சினிமா: இன்னும் சில படங்கள், உலக சினிமா: சில துணுக்குகள், உலக சினிமா: சில அனுபவங்கள், உலக சினிமா: சில பதிவுகள், உலக சினிமா: சில செய்திகள், தமிழ் சினிமா: முன்னைய பிறமொழி இசை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட திரைப்படம் சார்ந்த திறனாய்வு மற்றும் அறிமுகக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஈழத்தமிழ் இலக்கியப் பரப்பில் சினிமாத்துறை சார்ந்த விமர்சனங்களை எழுதுவதில் நீண்டகால அனுபவம் உடையவர் கே.எஸ்.சிவகுமாரன். இந்த நூலில், உலக சினிமா பற்றிய நுணுக்கங்கள், அவை பற்றிய ஆசிரியரது அனுபவங்கள், உலகத் திரைப்பட விழாக்களில் விதந்து பேசப்பட்ட திரைப்படங்கள், அவை தொடர்பான திறனாய்வுகள் என்பன அடங்கியுள்ளன. சர்வதேச ரீதியில் திரைப்படக் கலையின் போக்கு எவ்வாறு உள்ளது என்பதை அறிந்துகொள்ள இந்நூல் சிறந்ததொரு வழிகாட்டியாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 261463cc).


மேலும் பார்க்க: 12996.

ஏனைய பதிவுகள்

Tic Tac Toe Gamble totally free

Content Which are the preferred Thumb Video game? Mcdougal was required to make situation ahead of the entire Desktop computer Player people, just who then