உடுவில் வே.மு.சபாரத்தினசிங்கம். யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை, வண்ணார்பண்ணை, 3வது பதிப்பு, 1958, 1வது பதிப்பு, 1948, 2வது பதிப்பு, ஒக்டோபர் 1948 (யாழ்ப்பாணம்: ம.வே.திருஞானசம்பந்தன், சைவப்பிரகாச யந்திரசாலை, வண்ணார்பண்ணை).
(2), 108 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 1.00, அளவு: 17.5 x 12.5 சமீ.
இந்நூல் ஐந்தாம் ஆறும் வகுப்பு மாணவர்க்கெனச் சிறப்பாக எழுதப்பட்டிருப்பினும் ஏனைய வகுப்பிலுள்ள மாணவர்க்கும், தேகசுகத்தைப் பேண விரும்பும் எவருக்கும் பெரும் பயனைத் தருவதாகும். ஆரோக்கியம் என்ற முதற் பிரிவில், தேகாரோக்கியம், செவ்வையாக நிற்றல், இருத்தல்-நடத்தல், இளைப்பாறுதல், நித்திரை, சுவாசித்தல், உடற் சுத்தம், ஸ்நானம், பற்கள், மயிர், பேன் நகங்கள், கண், காது, ஆசாரம் (வீடு அயல் ஆதியவற்றைச் சுத்தமாகப் பேணல்), மலசலங் கழித்தல், தண்ணீர், போசனம், நோய்களைப் பரப்பும் பிராணிகள்: ஈக்கள், முட்டுப்பூச்சி, நுளம்பு, சரீரத்தின் அமைப்பு, சரீரத்தின் தொழில்கள்-1, சரீரத்தின் தொழில்கள்-2, சில நோய்களும், தடுக்கும் வழிகளும்: சிரங்கு, மலேரியா, பாண்டுநோய், கூகைக்கட்டு, சின்னமுத்து, கோப்புளிப்பான், குக்கல், அம்மை, வாந்திபேதி, பிளேக் கயரோகம், நெருப்புக் காய்ச்சல், சாதாரண கிருமி நாசினிகள், சூரிய வெளிச்சம், இலகுவான உடன் சிகிச்சை, வீதியிற் போய்வருதல் ஆகிய 23 தலைப்புகளில் பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. தேகப்பயிற்சிப் பிரிவில் நிற்றல், இருத்தல், ஆறுதலாக நிற்றல், அவதானத்துடன் நிற்றல், நடத்தல், சமநிலைப் பயிற்சி, கும்மியடித்தல், சுவாச அப்பியாசம், கும்மி, கயிற்றுப் பாய்ச்சல், கும்மி, (உடற்சுத்தம்), கோலாட்டம் (ஆனந்தக்களிப்பு), துலா ஆடுதல், பசுவும் புலியும், பந்தாலடித்தல், போசனக் கிரமம் (கும்மி), வரிசைக்கு நால்வராக அணிவகுத்துச் செல்லுதல், தொட்டோடுதல், நோய்களின் வகை, நோய்கள் பரவும் வகை (கும்மி), சரீராப்பியாசம், நோயைத் தடுக்கும் முறை (கும்மி), ஆட்டங்களில் நடந்துகொள்ள வேண்டியமுறை, நோயைத் தடுக்கும் முறை (கும்மி) ஆகிய தலைப்புகளின்கீழ் இப்பிரிவில் தேகப்பயிற்சிகள் விளக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபைப் பிரசுர இலக்கம் 49. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2251. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 007110).