12717 – கிரிக்கெட் உலக சாதனையாளர்கள்.

நூராணியா ஹசன். மாவனல்ல: நூராணியா பதிப்பகம், 157, உயன்வத்தை, தெவனகல, 1வது பதிப்பு, ஏப்ரல் 2000. (மாவனல்ல: எம்.ஜே.எம். ஓப்செட் அச்சகம், 119 பிரதான வீதி).

xi, 60 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 75., அளவு: 19.5 x14 சமீ., ISBN: 955-8402-00-1.

தினகரன் பண்ணையில் வளர்ந்த மற்றொரு எழுத்தாளராகத் திகழ்பவர் நூராணியா. இந்நூலில் ஒன்பது கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தினைத் தந்துள்ளார். கிரிக்கெட் உலகில் அவர்கள் பதித்துச் சென்ற சாதனைகளையும் தெளிவாகத் தந்துள்ளார். குறிப்பாக இலங்கை வீரர் முத்தையா முரளிதரனின் சாதனைகளை விபரமாகத் தரமுயன்றுள்ளார். மொழியைச் சிறப்பான விதத்தில் கையாண்டு வாசகர்களைக் கவரும் வகையில் நூராணியாஹசனின் எழுத்தோட்டம் அமைந்துள்ளது. இந்நூலில் முத்தையா முரளீதரன், இம்ரான்கான், அலன்போடர், கபில்தேவ், விவியன் ரிச்சாட்ஸ், கிரஹம் கூச், மைக்கல் ஹோல்டின், சேர். ரிச்சர்ட் ஹட்லி, துலிப் மெண்டிஸ் ஆகியோர் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை இந்நூலில் கண்டறிய முடிகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்20955. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 007483).

ஏனைய பதிவுகள்