12718 – கிரிக்கெட் உலகில் பிரகாசித்தவர்கள்.

நூராணியா ஹசன். மாவனல்ல: நூராணியா பதிப்பகம், 157, உயன்வத்தை, தெவனகல, 1வது பதிப்பு, டிசம்பர் 2000. (மாவனல்ல: எம்.ஜே.எம். ஓப்செட் அச்சகம், 119 பிரதான வீதி).

.xi, 52 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 75.00, அளவு: 21 x 13.5 சமீ., ISBN:955-8402-01-x.

வானொலி தொலைக்காட்சி இரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான ‘நூராணியாஹசன்” கிரிக்கெட் நேர்முக வர்ணனையாளராகத் திகழ்வதோடு பத்திரிகைகளிலும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றுள் சில நூலுருவம் பெற்றுள்ளதால் வாசிக்கவும் தகவல்களை அறிந்து கொள்வதற்கும் பயனுள்ளவையாக இருக்கின்றன. ஜாவிட் மியன்டாட் (((Javed Miandad), சுனில் கவாஸ்கர் (((Sunil Gavaskar), டெஸ்மன் ஹேய்ன்ஸ் ((Desmond Haynes), மாக் டேலர் ((Mark Taylar), அர்ஜூன ரணதுங்க((Arjuna Ranathunga), ரவி சாஸ்திரி (((Ravi Shastri), மாட்டின் குரோ (Martin Crow) ஆகிய கிரிக்கெட் வீரர்கள் பற்றிப் பல்வேறு சுவையான செய்திகளையும் இந் நூல் வழங்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29077. நூலகம் நிறுவன இணையத்தளநூலகத்தின் சேர்க்கை இலக்கம் 007484).

ஏனைய பதிவுகள்

14155 நவநாதம் 1998: நாவலப்பிட்டி-குயீன்ஸ்பரி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம் மகா கும்பாபிஷேகச் சிறப்பு மலர்.

இரா.ராஜகோபால் (நிர்வாக ஆசிரியர்), க. பொன்னுத்துரை (மலராசிரியர்), கனகசபாபதி நாகேஸ்வரன் (பதிப்பாசிரியர்). நாவலப்பிட்டி: மலர் வெளியீட்டுக் குழு, ஸ்ரீ தேவசேனாபதி சுவாமி ஆலயம், குயின்ஸ்பரி, 1வது பதிப்பு, ஜனவரி 1998. (கொழும்பு 13: லட்சுமி

14993 யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் தொல்பொருளியல் மரபுரிமை.

மாலினீ டயஸ், சுனில் பண்டார கோரளகே, எம்.வீ.ஜீ. கல்ப அசங்க (சிங்கள மூலம்), எம்.எம்.ஹலீம் டீன் (தமிழாக்கம்). கொழும்பு 7: தொல்பொருளியல் திணைக்களம், ஸ்ரீமத் மார்கஸ் பர்ணாந்து மாவத்தை, 1வது பதிப்பு, 2016. (பாதுக்க:

12195 – அறிவின் சமூகவியல் சிந்தனைகள்.

என்.சண்முகலிங்கன். தெல்லிப்பளை: நாகலிங்கம் நூலாலயம், நகுலகிரி, மயிலிட்டி தெற்கு, 1வது பதிப்பு, ஜுன் 2013. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி). x, 108 பக்கம், விலை: ரூபா 390.,

14243 இஸ்லாத்தின் வழியில் பெண்கள் சுத்தம்.

செய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமின் (மூலம்), ஸாலிஹ் அஸ்.ஸாலிஹ் (ஆங்கில மொழிபெயர்ப்பு), எஸ். எம்.மன்சூர் (தமிழாக்கம்). சவூதி அரேபியா: I.P.C.Islam Presentation Committee, P.O.Box 1613, Safat 13017, 1வது பதிப்பு,