12719 – சதுரங்கத்தின்அடிப்படைகளும் தொடக்க முறைகளும்.

சி.வித்தியாதரன். யாழ்ப்பாணம்: ஹரி கஸ்பரோவ் சதுரங்க அக்கடமி (புயசசல முயளியசழஎ ஊhநளள யுஉயனநஅல)இ ழே.5, வைமன் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஜுலை 2005. (யாழ்ப்பாணம்: சிமாட் பிரின்டர்ஸ், இல. 717 காங்கேசன்துறை வீதி).

viii, 49 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 20 x 14 சமீ.

இந்நூலாசிரியர் கடந்த ஒரு தசாப்தமாக யாழ்ப்பாண மண்ணில் பல சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்றும், பல போட்டிகளை நடத்தியும், பயிற்சிக் கருத்தரங்குகளை நடாத்தியும் அனுபவம் பெற்றவர். இந்நூல் சதுரங்கம் பற்றிய பல்வேறு நிபுணத்துவத் தகவல்களைத் தருகின்றது. சதுரங்கம் என்றால் என்ன?, சதுரங்கப்பலகையில் காய்கள் அடுக்கும் விதம், இராஜாவினை நகர்த்தும் முறை, இராணியினை நகர்த்தும் முறை, கோட்டையினை நகர்த்தும் முறை,மந்திரியினை நகர்த்தும் முறை, குதிரையினை நகர்த்தும் முறை, சிப்பாயினை நகர்த்தும் முறை,செக் என்றால் என்ன?, செக்கிற்குள்ளாகும் சந்தர்ப்பங்களில் என்ன செய்யவேண்டும்?, செக்மேட் என்றால் என்ன?, சிப்பாயின் உயர் பதவி, சதுரங்கக் காய்களின் குறியீடுகள், சதுரங்கப் பலகையிலுள்ள கட்டங்களின் பெயர்கள், மத்திய சதுரங்கள், சதுரங்கத்தில் காய்களின் புள்ளியிடல், கோட்டை கட்டுதல், கோட்டை கட்டுவதற்கான நிபந்தனைகள், சமநிலை ஆட்டங்கள், ஸ்டேல் மேட் என்றால் என்ன?, Fifty Moves Rule, சமநிலையடைவதற்கான அடிப்படை வழிமுறைகள், Touch move Rule, Rank-File-Diagonal, Open File, Doubled Pawn, Seventh Rank, ஒப்புதலின் பேரில் சமநிலை, Fork என்றால் என்ன?, Pin என்றால் என்ன? என இன்னோரன்ன தகவல்களையும் சட்டதிட்டங்களையும் இந்நூல் சுருக்கமாக விளக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45241).

ஏனைய பதிவுகள்

8 Lucky Appeal Spinomenal Jogos

Content Lucky Charms Ports Have The newest provided nutrition info is merely a keen approximation, while the differences is also arise with respect to the