12720 – சர்வதேச கிரிக்கெட் நிகழ்வுகள்.

எஸ்.எல்.ரியாஸ். எம்.மொஹம்மட் ஜெஸ்மின். கல்முனை: ஹோலிபீல்ட் பப்ளிக்கேஷன், முதலாவது தளம், 220, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2001. (கல்முனை: அல்-நூர் கிராப்பிக்ஸ்).

xi, 180 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21 x 15 சமீ., ISBN:955-8528-00-5.

இந்நூலில் டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் சர்வதேச போட்டிகள் ஆகிய இரண்டு பிரிவுகளின்கீழ் சர்வதேசரீதியாக நடைபெற்ற கிரிக்கெட் நிகழ்வுகள் பற்றி நாடுகள் வாரியாக விபரிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகள் -என்ற முதலாவது பிரிவில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், நியூசிலாந்து, இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை, ஸிம்பாப்வே, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் நிகழ்ச்சிகள் விளக்கப்பட்டுள்ளன. ஒருநாள் சர்வதேச போட்டிகள் என்ற பிரிவில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், நியூசிலாந்து, இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை, ஸிம்பாப்வே, பங்களாதேஷ், கனடா, கிழக்கு ஆபிரிக்கா, ஏனைய நாடுகள் ஆகியவற்றின் கிரிக்கெட் நிகழ்ச்சிகள் விபரிக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40778). மேலும் பார்க்க: 12509

ஏனைய பதிவுகள்