12723 – சிற்பிகள்.


சூரியநிலா (இயற்பெயர்: ஆ.ஜென்சன் றொனால்ட்). சாவகச்சேரி: அன்சன் கலையகம், உசன், மிருசுவில், 1வது பதிப்பு, சித்திரை 2013. (சாவகச்சேரி: கஜானன் பன்முக சேவை, அல்லாரை வீதி, மீசாலை).

72 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20 x 14 சமீ.

மிருசுவில்-உசன் பிரதேசத்தைச் சேர்ந்த சூரியநிலா தேசியப் பத்திரிகைகளில் தனது கவிதைகளால் அறியப்பெற்றவர். அவரது முதலாவது சிறுவர் பாடல் தொகுப்பு இதுவாகும். சூரியக் குளியல் என்ற கவிதைத் தொகுதியையும், சந்தனக்காற்று என்ற ஒலிப்பேழையையும் வெளியிட்ட இவரது மூன்றாவது நூல் இது. சிற்பிகள், என் அம்மா, ஆசை அப்பா, சுட்டித்தனம், முயல், யானை, சகுனம், மழை, விபத்துகள் வேண்டாம், ஆசிரியர் என இன்னோரன்ன 29 பாடல்களை இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 232159CC, 232162CC).

ஏனைய பதிவுகள்