12723 – சிற்பிகள்.


சூரியநிலா (இயற்பெயர்: ஆ.ஜென்சன் றொனால்ட்). சாவகச்சேரி: அன்சன் கலையகம், உசன், மிருசுவில், 1வது பதிப்பு, சித்திரை 2013. (சாவகச்சேரி: கஜானன் பன்முக சேவை, அல்லாரை வீதி, மீசாலை).

72 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20 x 14 சமீ.

மிருசுவில்-உசன் பிரதேசத்தைச் சேர்ந்த சூரியநிலா தேசியப் பத்திரிகைகளில் தனது கவிதைகளால் அறியப்பெற்றவர். அவரது முதலாவது சிறுவர் பாடல் தொகுப்பு இதுவாகும். சூரியக் குளியல் என்ற கவிதைத் தொகுதியையும், சந்தனக்காற்று என்ற ஒலிப்பேழையையும் வெளியிட்ட இவரது மூன்றாவது நூல் இது. சிற்பிகள், என் அம்மா, ஆசை அப்பா, சுட்டித்தனம், முயல், யானை, சகுனம், மழை, விபத்துகள் வேண்டாம், ஆசிரியர் என இன்னோரன்ன 29 பாடல்களை இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 232159CC, 232162CC).

ஏனைய பதிவுகள்

12467 – சிவசக்தி 2016: றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றம் கலைமகள் ; விழா மலர்

என்.கே.அபிஷேக்பரன், எம்.ரூபீக்ஷன், வு.சிந்துஜன் (ஆசிரியர் குழு). கொழும்பு:இந்து மாணவர் மன்றம், றோயல் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016.(கொழும்பு: ஓசை டிஜிட்டல் நிறுவனம்). 256 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

12168 – முருகன் பாடல்: இரண்டாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1992. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

Local casino Bonuses Archives

Content 22 100 percent free Revolves To the Publication Away from Inactive At the Slot Globe Wilderino Local casino: 50 Free Spins No deposit Missed

14362 மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கல்லூரி திறப்புவிழா மலர் 1953.

மா.வடிவேல் (மலர் ஆசிரியர்). மட்டக்களப்பு: திறப்பு விழாக் குழு, அரசினர் ஆசிரியர் கல்லூரி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1953. (கொழும்பு 1: சிலோன் பிரின்டர்ஸ் லிமிட்டெட், 20, பார்சன் வீதி, கோட்டை). vi, 52