12726 – வாழத் துடிக்கும் வடலிகள்.

செ.அன்புராசா. மன்னார்: முருங்கன் முத்தமிழ் கலாமன்றம், 1வது பதிப்பு, மார்கழி 2017. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். கிராப்பிக்ஸ்).

xviii, 30 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21 x 15 சமீ., ISBN: 978-955-4609-02-0.

அருட்திரு செ.அன்புராசா எழுதிய சிறுவர் இலக்கிய நூல். இத்தொகுப்பில் 22 சிறுவர் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சிறார்களை வடலிகளுக்கு உவமானமாக்குகின்றார். சிறார்கள் பெற்றோரின் நடத்தைகளைக் கேள்விக்கு உள்ளாக்குவதாகவும் சமூகத்தில் உலாவும் மனிதர்களின் போலி முகத்திரைகளை கிழித்தெறிவதாகவும் தமது பிரச்சினைகளைத் தாமே உரத்துப் பேசுவதாகவும் இப்பாடல்கள் அமைந்துள்ளன. சிறுவர் தம் பிரச்சினைகளைத் தாமே வெளிப்படுத்துவதாகப் பாடல் வரிகளை அமைத்துள்ளார். பாடல்கள் உயரியவிழுமியங்களைப் போதிப்பதாகவும் அமைந்துள்ளன.

ஏனைய பதிவுகள்

12201 – ஸ்பியர்திட்டம்: மனிதநேய சாசனமும் மனிதநேய மறுசீரமைப்பின் அடிப்படைத் தரங்களும்.

மனிதநேய அமைப்புக்களின் கூட்டமைப்பு. கொழும்பு 7: மனிதநேய அமைப்புக்களின் கூட்டமைப்பு, இல. 86, றொஸ்மீட் பிளேஸ், 3வது பதிப்பு, 2011, 1வது பதிப்பு, 2000, 2வது பதிப்பு, 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை). vi,