12731 – மாணவர் கட்டுரைக் களஞ்சியம்.


லீலாதேவி ஆலாலசுந்தரம். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).


46 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 22 x 14.5 சமீ.,ISBN: 978-955-7461-09-0.


கடவுள் வழிபாடு, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், கல்வி, சூழல்மாசுறுதல், பாழடைந்த மண்டபம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், சுவாமி விபலாநந்தர், செல்வி புளோரன்ஸ் நைற்றிங்கேல் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட எட்டுக் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாணம் அரியாலையில் பிறந்த லீலாதேவி ஆலாலசுந்தரம் (1935-2017) சென்னைப் பல்கலைக்கழகத்தின் கலைமாணிப் பட்டதாரி. யாழ்ப்பாணத்தில் செங்குந்தா இந்துக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். தமிழ், ஆங்கிலம், இந்து நாகரிகம் ஆகியவற்றை பிரதான பாடங்களாகக் கற்பித்து நன்மாணாக்கர் சமூகத்தை உருவாக்கியவர். இவரது 25 ஆண்டுக்கால கற்பித்தல் அனுபவத்தின் வெளிப்பாடாக இக்கட்டுரைகள்அமைகின்றன.

ஏனைய பதிவுகள்