ஆர்.பாலகிருஷ்ணன்,T.L.M.புஹாரி. கொழும்பு 13: இளம்பிறை எம்.ஏ.ரகுமான், அரசு வெளியீடு, 231 ஆதிருப்பள்ளித் தெரு, 1வது பதிப்பு, 1969. (கொழும்பு 13: ரெயின்போ பிரிண்டர்ஸ், 231 ஆதிருப்பள்ளித் தெரு).
(4), 67 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19 x 13 சமீ.
காந்தி நூற்றாண்டின் நினைவாக ஏககாலத்தில் அரசு வெளியீடாக வெளியிடப்பட்ட ஐந்து நூல்களுள் இதுவும் ஒன்றாகும். இந்நூல் 22ஆவது அரசு வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் அகில இலங்கையிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்காக நடைபெற்ற காந்தி நினைவுப் போட்டிகளில் பரிசுபெற்ற பதினேழு கிழக்கிலங்கை மாணவர்களின் கட்டுரைகள் மட்டும் உள்ளடக்கப்பட்டுள்ளன. பொன் அனுரா, த.சிவமணி, பொன் மேகலா, கா.கனகசுந்தரம், ஆர்.சோமசுந்தரம், த.சதானந்தம், எஸ்.தம்பிராஜா, வீ.சாந்தராஜ், ரி.ஜெயவேணி, தி.காஞ்சனா, கே.சஞ்சிவரத்தினம், T.விஜயகுமாரி, வி.யோகராஜா, எம். துரைராஜசிங்கம், எஸ்.மொஹிதீன் பாவா, இ.தாமோதரம்பிள்ளை, எம்.விமலாவதி ஆகிய 17 மாணவர்களின் ஆக்கங்கள் இவை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18958).
மேலும் பார்க்க: 12544.