12735 – யாழ்ப்பாணத்து நல்லூர் மகாவித்துவான்அரசகேசரி இயற்றிய இரகுவம்மிசம் மூலமும் பதவுரையும்: இரண்டாம் பாகம்.


அரசகேசரி (மூலம்), சி.கணேசையர் (பதவுரை). யாழ்ப்பாணம்: சி.கணேசையர், புன்னாலைக் கட்டுவன், 1வது பதிப்பு, புரட்டாதி (கொக்குவில்: சோதிடப்பிரகாச அச்சியந்திரசாலை).

324 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 20 x 14 சமீ.

‘யாழ்ப்பாணத்து மகாவித்துவான் அரசகேசரியினாலே வடமொழியினின்றும் மொழிபெயர்த்துத் தமிழ்மொழிக் கண் யாக்கப்பட்ட இரகுவம்மிசமென்னும் நூலுக்குத் திக்குவிசயப்படலம் முடிய உரை எழுதி யாம் முன் வெளிப்படுத்தியதை அறிஞர் யாவருமறிவர். ஒழிந்தவற்றுள் அயனுதயப்படல முதல் இந்துமதி பிறப்புநீங்குபடல முடிய (பொதுக்காண்டம் முடிய) இவ்வுரை எழுதப்பட்டுள்ளது. இதனை இரண்டாம் பாகமாக அச்சிட்டு இப்பொழுது வெளிப்படுத்தியுள்ளோம். இவ்வுரை பதவுரையும் செய்யுண் முடிபுகளுமாகவே பெரும்பாலும் எழுதப்பட்டுள்ளது. அவற்றோடு விரிவுரையும் இன்றியமையாதவற்றிற்கு எழுதப்பட்டுள்ளது. ஏனையவற்றிற்கு விரிவஞ்சி விடுக்கப்பட்டது. முதனூற் கருத்தோடு மாறுபடாவண்ணம் இவ்வுரை எழுதப்பட்டுள்ளது. முதனூற்சுலோகங்களும் இடையிடையே மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன.”-சி. கணேசையர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2523).

ஏனைய பதிவுகள்

12795 – உறையும் பனிப்பெண்கள்: சிறுகதைகள்.

சுமதி ரூபன். சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி.55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்சு சாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (சென்னை600 005: ஜோதி என்டர்பிரைஸஸ்). 96 பக்கம், விலை: இந்திய

14727 வெளிச்சம்: இலங்கேஷின் சிறுகதைகள்.

இலங்கேஷ் (மூலம்), பூனாகலை அருள்கார்க்கி (இயற்பெயர்: இராஜேந்திரன் டேவிட் அருளானந்தன், தொகுப்பாசிரியர்). பண்டாரவளை: மாரிமுத்து ஜோதிகுமார், பொருளாளர், ஊவா-தமிழ் இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு, ஜனவரி 2016. (பண்டாரவளை: W.A.S. பிரின்டர்ஸ், 20/14, சேனநாயக்க

14344 முள்ளிவாயக்கால் பதிவுகள் Stories of Mullivaikkaal.

அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம். யாழ்ப்பாணம்: அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம், இல. 70, மணல்தரை ஒழுங்கை, திருநெல்வேலி, 1வது பதிப்பு, மே 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). 126 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

12520 – வணிகக் கல்வி-பகுதி II: முகாமைத்துவம்.

யு.விஜேந்திரன் (புனைபெயர்: சண்). கொழும்பு: விஜேந்திரன் (சண்), 1வது பதிப்பு, நவம்பர் 2001. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). (6), 146 பக்கம், விலை: ரூபா 175., அளவு:

14578 உயிர் விதைப்பு (கவிதைகள்).

சோதியா (இயற்பெயர்: சிவதாஸ் சிவபாலசிங்கம்). நோர்வே: தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், தாய்நிலம் பதிப்பகம், ஒஸ்லோ, 1வது பதிப்பு, மாசி 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை). 71 பக்கம், விலை: 50 குரோணர்கள், அளவு:

14545 கம்பராமாயணம் யுத்தகாண்டம் -கும்பகருணன் வதைப்படலம் (முதல் 170 செய்யுள்கள்).

பா.பரமேசுவரி (உரையாசிரியர்). கொழும்பு: கொழும்பு அப்போத்திக்கரிஸ் கம்பெனி லிமிற்றெட், குமார வீதி, கோட்டை, 1வது பதிப்பு, பெப்ரவரி 1956. (கொழும்பு: அப்போத்திக்கரிஸ் கம்பெனி லிமிட்டெட், குமார வீதி, கோட்டை). (2), 152 பக்கம், விலை: