12735 – யாழ்ப்பாணத்து நல்லூர் மகாவித்துவான்அரசகேசரி இயற்றிய இரகுவம்மிசம் மூலமும் பதவுரையும்: இரண்டாம் பாகம்.


அரசகேசரி (மூலம்), சி.கணேசையர் (பதவுரை). யாழ்ப்பாணம்: சி.கணேசையர், புன்னாலைக் கட்டுவன், 1வது பதிப்பு, புரட்டாதி (கொக்குவில்: சோதிடப்பிரகாச அச்சியந்திரசாலை).

324 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 20 x 14 சமீ.

‘யாழ்ப்பாணத்து மகாவித்துவான் அரசகேசரியினாலே வடமொழியினின்றும் மொழிபெயர்த்துத் தமிழ்மொழிக் கண் யாக்கப்பட்ட இரகுவம்மிசமென்னும் நூலுக்குத் திக்குவிசயப்படலம் முடிய உரை எழுதி யாம் முன் வெளிப்படுத்தியதை அறிஞர் யாவருமறிவர். ஒழிந்தவற்றுள் அயனுதயப்படல முதல் இந்துமதி பிறப்புநீங்குபடல முடிய (பொதுக்காண்டம் முடிய) இவ்வுரை எழுதப்பட்டுள்ளது. இதனை இரண்டாம் பாகமாக அச்சிட்டு இப்பொழுது வெளிப்படுத்தியுள்ளோம். இவ்வுரை பதவுரையும் செய்யுண் முடிபுகளுமாகவே பெரும்பாலும் எழுதப்பட்டுள்ளது. அவற்றோடு விரிவுரையும் இன்றியமையாதவற்றிற்கு எழுதப்பட்டுள்ளது. ஏனையவற்றிற்கு விரிவஞ்சி விடுக்கப்பட்டது. முதனூற் கருத்தோடு மாறுபடாவண்ணம் இவ்வுரை எழுதப்பட்டுள்ளது. முதனூற்சுலோகங்களும் இடையிடையே மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன.”-சி. கணேசையர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2523).

ஏனைய பதிவுகள்

15203 இலங்கை பயிற்சி வட்டத்திற்கான கைநூல்.

சர்வதேச பொது தொழிலாளர் கூட்டமைப்பு. கொழும்பு: சர்வதேச பொது தொழிலாளர் கூட்டமைப்பின் இலங்கை இணைப்பு கமிட்டி, இணை வெளியீடு, India: Public Service International (South Asian Region), H.No. 6, I-Block, Sector-10,