12735 – யாழ்ப்பாணத்து நல்லூர் மகாவித்துவான்அரசகேசரி இயற்றிய இரகுவம்மிசம் மூலமும் பதவுரையும்: இரண்டாம் பாகம்.


அரசகேசரி (மூலம்), சி.கணேசையர் (பதவுரை). யாழ்ப்பாணம்: சி.கணேசையர், புன்னாலைக் கட்டுவன், 1வது பதிப்பு, புரட்டாதி (கொக்குவில்: சோதிடப்பிரகாச அச்சியந்திரசாலை).

324 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 20 x 14 சமீ.

‘யாழ்ப்பாணத்து மகாவித்துவான் அரசகேசரியினாலே வடமொழியினின்றும் மொழிபெயர்த்துத் தமிழ்மொழிக் கண் யாக்கப்பட்ட இரகுவம்மிசமென்னும் நூலுக்குத் திக்குவிசயப்படலம் முடிய உரை எழுதி யாம் முன் வெளிப்படுத்தியதை அறிஞர் யாவருமறிவர். ஒழிந்தவற்றுள் அயனுதயப்படல முதல் இந்துமதி பிறப்புநீங்குபடல முடிய (பொதுக்காண்டம் முடிய) இவ்வுரை எழுதப்பட்டுள்ளது. இதனை இரண்டாம் பாகமாக அச்சிட்டு இப்பொழுது வெளிப்படுத்தியுள்ளோம். இவ்வுரை பதவுரையும் செய்யுண் முடிபுகளுமாகவே பெரும்பாலும் எழுதப்பட்டுள்ளது. அவற்றோடு விரிவுரையும் இன்றியமையாதவற்றிற்கு எழுதப்பட்டுள்ளது. ஏனையவற்றிற்கு விரிவஞ்சி விடுக்கப்பட்டது. முதனூற் கருத்தோடு மாறுபடாவண்ணம் இவ்வுரை எழுதப்பட்டுள்ளது. முதனூற்சுலோகங்களும் இடையிடையே மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன.”-சி. கணேசையர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2523).

ஏனைய பதிவுகள்

14855 மாத்து: கலை இலக்கியக் கட்டுரைகள்.

த.மலர்ச்செல்வன் (தொகுப்பாசிரியர்). வாழைச்சேனை: கோறளைப்பற்று பிரதேச செயலகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (மட்டக்களப்பு: துர்க்கா அச்சகம்). v, 69 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978- 955-50710-3-1. இந்நூலில்

12250 – பொருளாதாரம்: பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய பாடநூல்.

அல்பிரட் W.ஸ்டோனியர், டக்ளஸ் சி.ஹேக். கொழும்பு 5: அரச கரும மொழித் திணைக்களம், 5, தி.பொன்சேக்கா வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1963. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). xx, 630 பக்கம், அட்டவணைகள்,

12249 – பொருளாதாரக் கொள்கைகள்.

ஆனொல்ட் ஹார்பேர்கர், போர்ஜ் லியுங்கிரன், றோபேட் வேட், ஜுவான் கார்லோஸ் டி பப்லோ (ஆங்கில மூலம்), மா.கருணாநிதி, டி.தனராஜ் (தமிழாக்கம்), எஸ்.அன்ரனி நோபேட் (பதிப்பாசிரியர்). கொழும்பு 5: மார்கா நிறுவனம், தபால்பெட்டி எண். 601,

12402 – சிந்தனை: தொகுதி III இதழ் 1 (மார்ச் 1985).

சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 1985. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை).(6), 145 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 24×16.5 சமீ.