12736 – அரிச்சந்திர புராணம் : மயான காண்டம் உரையுடன்.

. ஆசு கவிராஜர் (மூலம்). சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ் நூற் பதிப்பகம், 1வது பதிப்பு, 1962.
(யாழ்ப்பாணம்: ஜோதி அச்சகம்).

viii, 123 பக்கம், விலை: ரூபா 1.25, அளவு: 17 x 12 சமீ.

அரிச்சந்திர புராணம் இருபதாம் நூற்றாண்டின் முற்பாதி காலம் வரையில் பலராலும் பயிலப்பட்டுவந்தது. இந்நூல் புராணம் என்னும் பெயரோடு அறியப்பட்டிருப்பினும் இது ஒரு காப்பியமென்றே அறிஞர்கள் கருதுகின்றனர். இது வடமொழி நூலைத் தழுவி 16-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ்க்காப்பியம். இதன் ஆசிரியர் பெயர் ‘வீரன்”. இவரைக் ‘கவிராசர்” எனச் சிறப்புப் பெயரால் அழைப்பர். இவரது ஊர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நல்லூர். இதனைக் குலோத்துங்க சோழநல்லூர் என்றும் கூறுவர். கவிராசரின் அரிச்சந்திர புராணத்துக்கு மூலநூலாக அரிச்சந்திர வெண்பா என்னும் நூலும் இருந்தது. அரிச்சந்திர புராணம் பத்துக் காண்டங்களைக் கொண்டது. 1215 பாடல்கள் இந்நூலில் உள்ளன. இதன் மயான காண்டப் பகுதியே தனியாகப் பிரித்தெடுத்து மாணவர்களுக்கேற்ற வகையில் எளிமையாக உரை எழுதப் பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2494).

ஏனைய பதிவுகள்

14 Nederland Bank Vestigingen Met Openingstijd

Inhoud Nederlanders Zullen Spelen Te Betrouwbare Online Casino’s Discover Nederland Casinowith Your Try Out Experience Which Dutch Gokhal Site Has Thesis Lieve Verzekeringspremie Offer? Nederlandse

Finding Foreign Bride

If you’re looking for a foreign bride, at this time there http://brides-blooms.com/ are some things you ought to know. The first thing is that seeing

14132 சுழிபுரம்-பறாளாய் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர்.

04.04.2004. பால. கோபாலகிருஷ்ண சர்மா (தொகுப்பாசிரியர்). சுழிபுரம்: பறாளாய் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், 1வது பதிப்பு, ஏப்ரல் 2004. (கொழும்பு 12: வாக்மி அச்சகம், 258/3, டாம் வீதி). iii, 92 பக்கம்,