வ.நடராஜன், கனக செந்திநாதன். சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ் நூற் பதிப்பகம், திருத்திய 7வது பதிப்பு, 1961, 1வது பதிப்பு, 1947, திருத்திய 6வது பதிப்பு, 1959. (யாழ்ப்பாணம்: திருமகள் அழுத்தகம், சுன்னாகம்).
viii, 96 பக்கம், சித்திரங்கள், விலை: 85 சதம், அளவு: 18 x 2 சமீ.
இந்நூலில் தமிழ்மொழி, மழை, கத்தரி வெருளி, எங்கள் நாடு, நாட்டு வணக்கம், வண்டிச் சவாரி, காடு, குதிரைகள் புலம்பல், ஒளவையாரும் முருகக் கடவுளும், ஆருளர் இனியே?, பிராமணனும் புலியும், சந்திரமதி புலம்பல், குரங்குச் சேட்டை, நல்ல அரசு, நளனும் மக்களும், கல்வி, சூரிய உதயம், நன்னெறி, செய்யுளை மனனஞ் செய்யும் வழி, யுத்தியுள்ள தீர்ப்பு, காற்று, கிழவியின் அறியாமை, உண்மையின் பயன், புகழ் வாய்ந்த சில விசித்திர மனிதர்கள் ஆகிய 24 பாடங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இப்புத்தகம் இலங்கைக் கல்வித் திணைக் களத்தினரால் இலங்கைப் பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும் துணைப்பாட நூலாக உபயோகிக்கத் தகுந்ததென 16.9.1952ஆம் திகதி தொடக்கம் அங்கீகரிக்கப் பெற்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4100).