12744 – தமிழ் இலக்கியம்: ஆண்டு 10-11: விளக்கக் குறிப்புகள்.

தமிழவேள் (இயற்பெயர் க.இ.க.கந்தசாமி). கொழும்பு 12: குமரன் புத்தகசாலை, 201, டாம் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1990. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி).

(4), 140 பக்கம், விலை: ரூபா 24.00, அளவு: 21 x 14 சமீ.


இலங்கையின் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் அண்மையில் வெளியிட்டுள்ள தமிழ் இலக்கியம் (ஆண்டு 10-11) என்னும் நூல் க.பொ.த. சாதாரண தேர்வு தமிழ் மொழிக்குப் பாடநூலாகவுள்ளது. அந்நூலில் காணப்படும் செய்யுட் பகுதிகளும் உரைநடைப் பகுதிகளும் சொற்செறிவும் கருத்து வளமும் மிக்கவை. அவற்றின் பயனைப் பெறுவதில் மாணவர்கள் இடர்ப்படுவதைத் தவிர்க்கும்வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 18 பாட அலகுகள் தரப்பட்டுள்ளன. கம்பராமாயணக் காட்சிகள், நளவெண்பா-சுயம்வர காண்டம், இஸ்லாமியக் கலையும் பண்பும், நாலடியார், மாதரும் மலர்ப் பொய்கையும், ஆசாரக்கோவை, சிரிக்கத் தெரிந்த பாரசீகர், பெரிய புராணம்-திருநகரச் சிறப்பு,கர்ணனும் கும்பகர்ணனும், இலங்கை வளம், கலையின் விளக்கம், நபி அவதாரப்படலம், நீதிக்குப்பின் பாசம், கங்கையில் விடுத்த ஓலை, ஒன்றுக்கு ஆயிரம் ஆயிரம், செய்நம்பு நாச்சியார் மான்மியம், நன்றிப் பெருக்கு, வினாக்கள் ஆகிய தலைப்புகளில் 18 அலகுகளும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாட அலகிலும் அரும்பதங்களும் அவற்றின் பொருள்களும் கொடுக்கப்பெற்றுள்ளன. கடினமான நீண்ட சொற்றொடர்கள் தனிச் சொற்களாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளன. இன்றியமையாத இலக்கணக் குறிப்புகள் கொடுக்கப்பெற்றுள்ளன. அணிகளின் அமைப்புக்கள் விளக்கப்பெற்றுள்ளன. இன்றியமையாத கருத்துக்கள் தொகுத்து எழுதப்பெற்றுள்ளன. பயனுள்ள வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. செய்யுள் உரைநடைப் பகுதிகளின் ஆசிரியர்களையும் நூல்களையும் பற்றிய குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24766).

ஏனைய பதிவுகள்