12747 – பாரதியார் பாடல்கள்: விளக்கவுரை.

சுப்பிரமணிய பாரதியார் (மூலம்), க.வேந்தனார் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறைவீதி, 4வது பதிப்பு, 1965. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை).

(4), 184 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 17.5 x 12.5 சமீ.


க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு 1965-1966 காலப்பகுதியில் தோற்றும் மாணவர்களுக்கானது. பாரதியாரின் பாடல்களுக்கு வித்துவான் அவர்கள் எழுதியுள்ள நயம், மாணவர்களுக்குப் புதியதோர் இலக்கிய விருந்தாகப் பொலிகின்றது. எளிமையும், இனிமையும், உணர்ச்சி வீறும் கொண்ட பாரதியார் பாடல்களை, எங்ஙனம் நுகர்ந்து சுவைக்கலாம் என்பதற்கோர் வழி காட்டியாக வித்துவான் அவர்களின் விளக்கவுரை விளங்குகின்றது. பாரத தேசம், நடிப்புச்சுதேசிகள், சுதந்திரப் பெருமை, சுதந்திரதேவியின் துதி, புதுமைப்பெண், தொழில், தமிழ்த் தாய், தமிழ், மூன்று காதல், வெண்ணிலாவே, முரசு ஆகிய 11 பாரதிபாடல்களுக்கு பதவுரையும், உவமான உவமேய விளக்கமும் தரப்பட்டுள்ளன. இந்நூலில் உரையாசிரியர் வித்துவான் வேந்தனார் யாழ்ப்பாணம் பரமேஸ்வரக்கல்லூரியின் தமிழ் விரிவுரையாளராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்கநூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4838. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 013430).

ஏனைய பதிவுகள்

12099 – இலண்டன் சைவ மாநாடு (பத்தொன்பதாவது) சிறப்புமலர்.

மலர் வெளியீட்டுக் குழு. இலண்டன் N 6 5BA: பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம், 200A, Archway Road, London, 1வது பதிப்பு, மே 2018. (இலண்டன்: ஜே.ஆர். பிரின்ட்). 156 பக்கம், புகைப்படங்கள்,

14876 சின்னச் சின்ன எண்ணங்கள்.

அனிஸ்டஸ் ஜெயராஜா. கொழும்பு 6: பூங்காற்று பதிப்பகம், 59, 1/1, ஹைலெவல் வீதி, கிருலப்பனை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை). xii, 38 பக்கம், விலை: ரூபா 100., அளவு:

12184 – ஸ்ரீ லலிதா கட்கமாலா, ஸஹஸ்ரநாமம், த்ரிஸதி.

நினைவு மலர்க் குழு. கொழும்பு 6: தில்லைநாயகி அம்மையார் நினைவு வெளியீடு, 109/4 மனிங் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மே 1998. (கொழும்பு 6: பிரின்ட் கிராப்பிக்ஸ், 4, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை).