12748 – பாரதியார் பாடல்கள்: வினா-விடைத் தொகுப்பு ஏ.எல்.தமிழ்.

சரவணமுத்துகருணாகரன். யாழ்ப்பாணம்: கலைக்குயில் கலைவட்டம், புத்தூர், 2வது பதிப்பு,
வைகாசி 2009, 1வது பதிப்பு, தை 2006. (வவுனியா: உமா பதிப்பகம்).

x, 87 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 20 x 3.5 சமீ.


வவுனியா, விபுலானந்தா கல்லூரியின் ஆசிரியரான ச.கருணாகரன், க.பொ.த. உயர் தர வகுப்பு மாணவர்களின் தமிழ் இலக்கிய பாடத் தேவைக்கு உதவும் வகையில் இந்நூலை வினா-விடைத் தொகுப்பாக எழுதிவழங்கியுள்ளார். சுப்பிரமணிய பாரதியார், விநாயகர் நான்மணி மாலை, வெண்ணிலாவே, வந்தேமாதரம், புதுமைப்பெண், தொழில், உயிர் பெற்ற தமிழர் பாட்டு, மகாத்மா காந்திபஞ்சகம், காணி நிலம் வேண்டும், அக்கினிக் குஞ்சு, காற்று ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 46755).

ஏனைய பதிவுகள்