12749 – புகழேந்திப் புலவர் இயற்றிய நளவெண்பா(சுருக்கம்) கலிதொடர் காண்டம்.

புகழேந்திப் புலவர் (மூலம்), வடஇலங்கை தமிழ்நூற் பதிப்பகம் (பதிப்பாசிரியர்கள்).
சுன்னாகம்: வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 1வது பதிப்பு, 1959. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

vi, 98 பக்கம், விலை: ரூபா 1.20, அளவு: 18.5 x 2.5 சமீ.


மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே நளவெண்பாவாகும். இதனை எழுதியவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவராவார். இதன் பெயர் சுட்டுவது போல், இந் நூல் வெண்பாக்களால் அமைந்தது. சுயம்வரகாண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந் நூலில், 405 வெண்பாக்கள் உள்ளன. இவற்றுள் சுயம்வரகாண்டத்தில் 155 வெண்பாக்களும், கலிதொடர் காண்டத்தில் 147 வெண்பாக்களும், கலிநீங்கு காண்டத்தில் 90 வெண்பாக்களும் உள்ளன. எஞ்சிய 13 வெண்பாக்கள், பாயிரம், நூல்வரலாறு என்பனவாகும். இந்நூலில் கலிதொடர் காண்டத்தின் 124 செய்யுள்களை உள்ளடக்கியுள்ளனர். அவற்றுக்கான பதவுரை, விசேடஉரை, இலக்கணக் குறிப்புகள் ஆகியவை நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் வரலாறும் முன்பகுதிக் கதைச் சுருக்கமும் மாணவர்களின் பயன்பாட்டுக்காக மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17164).

ஏனைய பதிவுகள்