12753 – இலக்கிய விழா 1990-1991: சிறப்பு மலர்.

எஸ்.எதிர்மன்னசிங்கம் (மலர்க் குழுவினர்சார்பில்). திருக்கோணமலை: கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, டிசம்பர் 1992. (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு-கிழக்கு மாகாணம்).

(12), 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5 x 9 சமீ.


வடக்கு-கிழக்கு மாகாண கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு 05.12.1992 அன்று நடத்திய இலக்கிய விழாவின் சிறப்பிதழ். வாழ்த்துச் செய்திகளுடன் தொடங்கும் இம்மலரில் மலரை நுகருமுன்…(எஸ். எதிர்மன்னசிங்கம்), கல்வி கலாசார அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு நடாத்தும் இலக்கிய விழாவும் புத்தகக் கண்காட்சியும் 1992, இலக்கியப் பரிசில்களை பெறும் நூல்கள் 1990-1991, இலக்கிய பரிசு திட்டத்திற்கு கிடைத்த இலக்கியங்கள், சமய இலக்கியங்கள் காட்டும் வாழ்க்கை நெறி (ஆர். வடிவேல்), நமக்கு மேலே ஒருவன் (வெல்லவூர்க் கோபால்), நமது நாட்டின் பண்பாட்டுப் பாரம்பரியம்: செந்தமிழும்
புதுப்புனைவும் (தமிழ்மணி ந. பாலேஸ்வரி), எமது கலைஞர்களின் அவலங்கள் (எஸ்.பற்குணம்), மேற்குலகு நாடுகளில் தமிழ்ச் சஞ்சிகைகள் ஓர் ஆய்வு (வி.மைக்கல் கொலின்), நன்றிக்குரியவர்கள் ஆகிய தலைப்புக்களில் படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 009050).

ஏனைய பதிவுகள்