12754 – இலக்கிய விழா 1995: சிறப்பு மலர்.

மலர்க் குழு. திருக்கோணமலை: வடக்கு கிழக்கு மாகாண கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, 1வது பதிப்பு, ஜுலை 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(10), 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27 x 21 சமீ.


திருக்கோணமலையில் நிர்வாகச் செயலகத்தைக் கொண்டியங்கிய வடக்கு-கிழக்கு மாகாண அரசின் கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு சில ஆண்டுகளாக, வருடாந்தம் தமிழ் இலக்கிய விழாவை சிறப்பாகக் கொண்டாடி வந்தது. அதன் நான்காவது இலக்கிய விழா மட்டக்களப்பில் 23.07.1995இல் நடந்தது. அவ்வேளையில் தேர்ந்தெடுத்த ஏழு துறைகளில் சிறப்பித்த அறிஞர்களை கௌரவித்து சாஹித்தியப் பரிசு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வினைச் சிறப்பிக்கும் வகையில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். இதில் வெல்லவூர் கோபால் (இதுவே இன்றைய நியதி), அன்பு முகையதீன் (பாதைகள்), கேணிப்பித்தன் (மனுவிட்டு ஈசன் போனான்), தம்பையூர்த் தங்கராசன்(கடவுளாக மாறலாம்) ஆகிய கவிஞர்களின் கவிதைகளுடன் வி.சிவசாமி (இலங்கையிலே பண்ணும் பரதமும்-சில குறிப்புகள்), கே.எஸ்.சிவகுமாரன் (ஈழத்து உடநிகழ்கால இலக்கியம்: சில அவதானிப்புகள்), சி.பற்குணம் (கவின்கலையும் அதன் நிலையும்), அகளங்கன் (கம்பராமாயணத்து வானரர்கள் குரங்குகளல்லர்: வாலுள்ள மனிதர்களே), அன்புமணி (ஆத்மீகம் செறிந்த கல்வியே அர்த்தமுள்ளது), துரை மனோகரன் (சங்க மருவியகால இலக்கியப் போக்கின் தனித்துவக் கூறுகள்), க.தங்கேஸ்வரி (ஈழத்தில் நாற்பது ஆண்டுகள் ஆட்சிசெய்த தமிழரசன் மாகோன்), எஸ்.எதிர்மன்னசிங்கம் (தமிழர் கலை இலக்கியங்களில் இசையின் பங்கு), சோ.இராசேந்திரம் (நோக்கும் போக்கும்) ஆகியோரின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14491).

ஏனைய பதிவுகள்

Onde Aparelhar Poker Online Grátis

Content Entenda acrescentar matemática pressuroso poker Jogue acercade jeito Melhores Cassinos Online uma vez que Atividade puerilidade Poker sem Depósito em Brasil (Novembro ⃣ Omaha