12757 – கவின் தமிழ்2001: வடக்கு கிழக்கு மாகாண தமிழ்மொழித்தின விழா மலர்.

ந.அனந்தராஜ் (இதழாசிரியர்). திருக்கோணமலை: வடக்கு-கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, ஜுலை 2001. (திருக்கோணமலை: உதயன் பதிப்பகம்).

xix, 120 பக்கம், சித்திரங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5 x18.5 சமீ.


09 ஜுலை 2001 அன்று இடம்பெற்ற தமிழ்மொழித் தின விழாவின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர். இம்மலரில் தமிழ் மணம் கமழும் மட்டக்களப்பு மீனவர் பாடல் (கு.சண்முகம்), பாரதியின் வசன கவிதைகளும் காற்றும் (செ.யோகராசா), தமிழில் மருத்துவ அறிவியல் நூல்கள் (வல்வை ந.அனந்தராஜ்),இலங்கையின் மாறிவரும் சனத்தொகையும் வரலாற்றுச் சிதைவுகளும் (சிவானந்திநடராஜா), அரக்கர் குலத்திலும் ஓர் அற்புத ஆன்மா (ச.கு.கமலசேகரன்), விபுலானந்தரின் கல்விக் கொள்கை (எஸ்.எதிர்மன்னசிங்கம்), காலத்தால் அழிந்துவிட்ட கந்தளாய் பிரம்மதேயம், அடங்காப்பற்றின் செட்டிகுளப் பிரதானிகளும் அவர்தம் வழிபாட்டு மரபுகளும் (ந.ஞானவேல்), சிறுவர்க்கு உகந்த சிறுவர் அரங்கு (முத்துக்குமாரு இராதாகிருஷ்ணன்), புறநானூற்றில் அறக்கருத்துக்கள் (தமிழ்மணி அகளங்கன்), நாவலும் காவியமும் (ஏ.எஸ்.
உபைத்துல்லா), பழம் மொழிகள் (தா.பி.சுப்பிரமணியம்), குழந்தையின் உடல், உள மேம்பாட்டில் நாட்டார் பாடல்கள் (செ.மெற்றாஸ் மயில்), பாரம்பரிய கலைகளை பேணிப்பாதுகாப்பதில் கல்வியியல் கல்லூரிகளின் பணிகள் (ச.இரமணீகரன்) ஆகிய கட்டுரைகளுடன் பாரதியார், நெடுந்தீவு மகேஸ், தாமரைத்தீவான், பு.சத்தியமூர்த்தி, அ.கௌரிதாசன், க.ஜெயவீரசிங்கம், கவிஞர் புரட்சிபாலன், நிலாந்தன் ஆகியோர் எழுதிய கவிதைகளும், இரத்தினசிங்கம் சர்வேஸ்வரா, ச.எனிடா, தட்சணாமூர்த்தி அகிலன், சிவலிங்கம் தாட்சாயினி, எம்.எம்.சர்ஹான் ஆகிய மாணவர்களின் ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20753).

ஏனைய பதிவுகள்