மலர்க் குழு. கொழும்பு: இந்து சமய கலாசார அலுவல்கள், இராஜாங்க அமைச்சரின் அலுவலகம், 1வது பதிப்பு, 1992. (கொழும்பு: சிலோன் பிரின்டேர்ஸ் நிறுவனம்).
(61), 43 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5 x 19 சமீ.
கொழும்பு மாநகரில் 1992, மே 7முதல் 10 வரை நான்கு நாட்கள் இடம்பெற்ற தமிழ் சாகித்திய விழாவின்போது வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். வாழ்த்துரைகள், ஆசியுரைகளுடன் வெளியிடப்பெற்றுள்ள இச்சிறப்பிதழில், நவீன தமிழ்க் கவிதை: ஒரு புதிய அலை (செ.யோகராசா), மலையகத்தில் நூல் வெளியீட்டு முயற்சிகள் (சாரல் நாடன்), விஞ்ஞானக் கலைச்சொல்லாக்க முயற்சிகளும் முரண்பாடுகளும் (சு.முரளிதரன்), ஈழத்தில் பயில் நிலையிலுள்ள தமிழ் நாடக அரங்கியற் கலை: அறிமுகமும், பேணுதல் வளர்த்தல் சம்பந்தமாக சில ஆலோசனைகளும் (சி.மௌனகுரு), தோப்பில் முகம்மது மீரான்: தமிழ் நாவல் உலகில் ஒரு புதிய வருகை (எம்.ஏ. நு‡மான்), இலங்கையிலுள்ள நானாதேசி வணிகரின் வெண்கல முத்திரை: தனிச்சிறப்புடையதொரு தொல்பொருட் சின்னம் (சி. பத்மநாதன்), சாகித்திய விழா – 1992: ‘இலக்கியச் செம்மல்” விருது பெறுபவர்கள்: ஓர் அறிமுகம், சாகித்தியப் பரிசு பெறும் நூல்கள் (1990 ஆம் ஆண்டில் பிரசுரமானவை), பாராட்டும் சான்றிதழும் பெறும் தமிழ்மணிகள்ஆகிய ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது.
சேர்க்கை இலக்கம் 24889).