12759 – தேசிய தமிழ் சாகித்திய விழா 1991: சிறப்பு மலர்.

ஏ.எம்.நஹியா (பதிப்பாசிரியர்). கொழும்பு: இந்து சமய, தமிழ் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சரின் அலுவலகம், 1வது பதிப்பு, 1991. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 201, டாம் வீதி).

(22), 168ூ(36) பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5 x 18.5 சமீ.


இம்மலரில் 31 ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நாவலர் தொடக்கிவைத்த சைவசமயக் கல்வி மறுமலர்ச்சி (வ.ஆறுமுகம்), சித்தி லெவ்வையின் உரைநடைச்சிறப்பு (எஸ்.எம்.கமால்தீன்), பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தத்தின் தோற்றம் (ஆ.வேலுப்பிள்ளை), சீறாவும் திருமறையும் (ம.மு.உவைஸ்), யாழும் வீணையும் (பொ.பூலோகசிங்கம்), தமிழிசை பற்றிய சில குறிப்புகள் (செ.கணேசலிங்கன்), மட்டக்களப்பும் மட்டக்களப்பின் பண்டைய கூத்து மரபுகளும் (வி.சி.கந்தையா), பிராமி எழுத்துக்கள் ஒரு வரலாற்று நோக்கு (ஆ.தேவராசன்), எமது சிறுகதைகளிலே புதிய அனுபவங்கள் (சி.தில்லைநாதன்), இலகு தமிழில் விஞ்ஞான இலக்கியம்
(திக்குவல்லை கமால்), ஈழத்துத் தமிழ் உரைநடை இலக்கியத்தின் ஆரம்பம் (வ.அ.இராசரத்தினம்), ஆனந்த குமாரசுவாமியின் இலங்கை வாழ்வும் பணிகளும் (அம்பலவாணர் சிவராசா), முத்தமிழ் வித்தகர் விபுலாநந்த அடிகளார் (ரீ.பாக்கியநாயகம்), மட்டக்களப்பு நாட்டுக்கவி இலக்கியமும் சங்கத் தமிழ்இலக்கியங்களும் (ஆ.மு.ஷரிபுத்தீன்), தமிழ் சிங்கள இலக்கிய உறவு (மயிலங்கூடலூர் த கனகரத்தினம்), மலையகத் தொழிலாளர் பற்றிய சிறுகதைகள்-ஓர் அறிமுகம் (க.அருணாசலம்), ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் (மேமன்கவி), எஸ்.பொ.வின் செந்தில்நாதன்: சடங்கு நாவலின் பாத்திரப் பண்பு பற்றிய ஒரு நோக்கு (துரை மனோகரன்), இலங்கையில் தமிழ் நூல் வெளியீடு: பிரச்சினைகளும் தீர்வுக்கான சில ஆலோசனைகளும் (எம்.ஏ.நு‡மான்), இலக்கிய வளர்ச்சிக்கான சில குறிப்புகள் (பிரேம்ஜி ஞானசுந்தரன்), இக்பாலும் பாரதியும் ஒர் ஒப்புநோக்கு (எம்.ஏ.எம்.சுக்ரி), தமிழ் மரபிற் கல்வி பற்றிய நோக்குகள் (சபாஜெயராசா), தமிழிலக்கிய மரபில் அரங்கேற்றம்-சில அவதானிப்புகள் (நா.சுப்பிரமணியன்), நாட்டார் வழக்காற்றில் கொத்தித் தெய்வம் (இரா.வை.கனகரத்தினம்), மலையகக் கலை இலக்கியம் (சி.அழகுப்பிள்ளை), தமிழ்பேராசான் சு.கணபதிப்பிள்ளை அவர்களின் வாழ்வும் ஈழத்து மண் வாசனை தழுவிய தமிழ்த் தொண்டும் (செ.குணரத்தினம்), ஈழத்து இலக்கியத்தில் இருபது வருட கணக்குகள் (கந்தையா குணராசா), பண்பாட்டுக் கோலங்கள் (அ.ஸ.அப்துஸ்ஸமது), மட்டக்களப்பின் கிராமியக் கலைகள் (எஸ்.எதிர்மன்னசிங்கம்), மலையகத்தில் சிறுகதை (தெளிவத்தை ஜோசப்), மொழிபெயர்ப்புக்கலை-சில அனுபவங்கள் (கே.கணேஷ்) ஆகிய தலைப்புகளில் இவ்வாய்வுக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில்பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24888).

ஏனைய பதிவுகள்

Poker Jogatina

Content Jogue Para Abiscoitar Prêmios Nos Melhores Torneios Vídeo Poker Dado : Aprenda An aprestar Sem Perder Dinheiro Estratégias Básicas Para Apostar Poker Acessível Atrair