12760 – நாவலப்பிட்டி பிரதேச சாகித்திய விழா மலர்: 14.08.1993.

நாவலப்பிட்டி பிரதேசசபை. நாவலப்பிட்டி: பிரதேச சபை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1993. (கொழும்பு 12:
லங்கா பப்ளிஷிங் ஹவுஸ், திலகா குரூப், 257, டாம் வீதி).

(52) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27 x 21 சமீ.


நாவலப்பிட்டி கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயம், நாவலப்பிட்டி தமிழ் கலாச்சாரமண்டபம் ஆகியவற்றில் 14.8.1993 அன்று நடைபெற்ற நாவலப்பிட்டி பிரதேசசாகித்திய விழாவையொட்டி வெளியிடப்பட்ட சிறப்புமலர். இதில் சாகித்தியவிழா கீதம் (கவிஞர் ம.சண்முகநாதன்), தமிழின் இனிமை (க.சுப்பிரமணியம்),உயர்ந்த மனிதன் (அந்தனி ஜீவா), இலக்கியச் செம்மல் சிவகுருநாதன் ஒரு யுகம் (மேமன் கவி), நாவல் நகர் வளர்த்த தமிழ் (தமிழோவியன்), மலையகவாழ் மக்களும் வழிபாடு வகைகளும் (செ.தமிழ்ச் செல்வன்), சமூக மக்களிடையே ஒரு கண்ணோட்டம் (சித்தி பரீடா மொஹம்மட்), நாட்டாரியல்-வசையும் வாழ்வும் (சு.முரளிதரன்), நாட்டாரியலும் பாரம்பரியமும் (பெ.ராமானுஜம்), சடங்குகள் (செல்வி.தா.பத்மா), நாட்டார் பாடல்கள் – (ஐ.கோபாலகிருஷ்ணன்), நாட்டார் இயல்பு (எஸ்.இராமையா), செங்கரும்பின் சுவையைவிட சுவைமிகு தாலாட்டு: தாயின் உணர்ச்சி வெள்ளம் (கவிஞர் எஸ்.பி.தங்கவேல்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28293. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 003173).

ஏனைய பதிவுகள்