12762 – நானிலம்: கலாசார விழா சிறப்பு மலர் 1997.

மலர் வெளியீட்டுக் குழு. செங்கலடி: கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், ஏறாவூர்ப்பற்று, 1வது பதிப்பு, 1997. (மருதமுனை: இளம்பிறை ஓப்செற்).

81 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25 x 18.5 சமீ.

ஏறாவூர்பற்று பிரதேச கலாசாரப் பேரவையினரால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் கலாசார விழாவின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர். கலாசார கீதம், முகம் தொலைந்த ஊரில் (கவிதை), கனவு மனிதர்கள் (சிறுகதை), பாடசாலை ஓர் பண்பாட்டு நிறுவனம் (கட்டுரை), வளர்க கலாசாரம் (கவிதை), சிவதொண்டன் நிலையக் கால்கோள், கொம்பு விளையாட்டு, அறுபதிலும் ஐடென்ரி (கவிதை), மட்டக்களப்பு தமிழகத்தில் இருந்து எறாவூர்ப்பற்றின் பங்கு, பழைய செஞ்சொற் செல்வம், நவீன தமிழ் இலக்கியத்தின் வித்துக்களும் வளர்ச்சியும், ஊரும் பெயரும், சர்வதேச மின்னணு வலையமைப்பு (இன்டர்நெட்), கலைஞர் கௌரவம், நினைவு வானில், விழா இனிக்க, கலாசார விழா 1997 போட்டி முடிவுகள் ஆகிய 17 தலைப்புகளில் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. மலர் வெளியீட்டுக் குழுவில் ந.ஸ்ரீகரன், பி.விநாயகமூர்த்தி, வி.உதயகுமார், எஸ்.சுதாஜினி, த.சேனாதிராஜா, அ.ச.பாய்வா ஆகியோர் பணியாற்றியிருந்தனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22155).

ஏனைய பதிவுகள்