12763 – பிரதேச சாகித்திய விழா 1997: சிறப்பு மலர்.

மலர்க்குழு. மட்டக்களப்பு: பிரதேச செயலகம், மண்முனைப்பற்று, ஆரையம்பதி, 1வது பதிப்பு, 1997. (அக்கரைப்பற்று: செலெக்ஷன் ஓப்செட்).

xii, 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5 x 17.5 சமீ.


மண்முனைப் பிரதேசத்தின் இலக்கியப் பாரம்பரியம் (ஆரையூர் அமரன்), மண்முனைப்பற்றுப் பிரதேசத்தின் பாரம்பரியக் கலைகள் (ஆரையூர் இளவல்), நாட்டு வைத்தியம் சொதிடம், மாந்திரீகம் (மூனாக்கானா), மண்முனைப்பற்று பிரதேச முஸ்லிம்களின் சடங்கு முறைகள் (ஐ.எம்.சரீப்), மண்முனைப்பற்று பிரதேச நவீன இலக்கிய முயற்சிகள் (த.மலர்ச்செல்வன்), கவனிக்கப்பட கவிதைப் பாரம்பரியம் (செ.யொகராசா), துயரில் தோய்ந்த முகங்கள் (த.மலர்ச்செல்வன்), மட்டக்களப்பு-கோவிற்குளம் புராதன ஸ்ரீ காசிலிங்கேஸ்வரர் கோவில் சாற்றுகவி (சிவ.விவேகானந்த முதலியார்), மட்டக்களப்பு-கோவிற்குளம் புராதன ஸ்ரீ காசிலிங்கேஸ்வரர் ஆலயம் வரலாற்றுச் சுவடுகள் (சிவ. விவேகானந்த முதலியார்) ஆகிய படைப்பாக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. இம்மலருக்கான தயாரிப்புக் குழுவில் வெ.தவராஜா, காசபதி நடராசா, க. செல்லத்தம்பி, ஜனாப் ஏ.எம்.ஆதம் அலி, மு.கணபதிப்பிள்ளை, மா.சதாசிவம் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22819).

ஏனைய பதிவுகள்

Lowest Volatility Slot machines

Content Speaking Pricey Gambling enterprise Errors To the Jackpot Gents The brand new Listingantique Columbia 5 Cent Video slot 100 percent free Harbors And no

14954 சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா நினைவு மலர்: 03.05.1992.

சா.இ.கமலநாதன் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை, 1வது பதிப்பு, மே 1992. (மட்டக்களப்பு: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்). xix, 224 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.

14453 க.பொ.த.(உயர்தரம்) இணைந்த கணிதம்: பெறுதிகளின் பிரயோகம்.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (மகரகம: அச்சகப் பிரிவு, தேசிய கல்வியியல் நிறுவகம், பானலுவ).