12764 – புதுமை இலக்கியம்: இலக்கியப் பேரரங்கு சிறப்பு மலர் 1996.

பிரேம்ஜி ஞானசுந்தரன் (நிர்வாக ஆசிரியர்), என்.சோமகாந்தன் (பொறுப்பாசிரியர்). கொழும்பு 11:
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஜுலை 1996. (கொழும்பு 2: அரசன் அச்சகம்).

(20), 21-131, (9) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5 x 19 சமீ.


1996 ஜுலை 5-7 திகதிகளில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற இலக்கியப் பேரரங்கின் நினைவாக வெளியிடப்பட்ட புதுமை இலக்கியம் சஞ்சிகையின் சிறப்பிதழ் இது. என்.சோமகாந்தனை செயலாளராகக் கொண்டியங்கிய இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இப்பேரரங்கிற்கு ஈழத்தின் பிரபல எழுத்தாளர்களுடன், இந்தியாவிலிருந்து வல்லிக்கண்ணன், பொன்னீலன், தாமரை.சி.மகேந்திரன் முதலானோரும் பங்கேற்றிருந்தனர். ஆய்வரங்கிற்குத் தலைமை தாங்கியவர் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களாவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16933. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 053285).

ஏனைய பதிவுகள்