12765 – புதுமை இலக்கியம் : பாரதி நூற்றாண்டு முன்னோடி மலர், 1956-1981.

என். சோமகாந்தன், லெ.முருகபூபதி (மலர்க் குழு). கொழும்பு 5: இலங்கை முற்போக்கு
எழுத்தாளர் சங்க வெளியீடு, 215 பG, 1/1, பார்க் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1981. (கொழும்பு 10: ருகுணு பிரின்டர்ஸ், 40/4 மாளிகாவத்த வீதி).

(8), 96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26 x 19 சமீ.


எழுத்தாளர் கீதம் (அ.ந.கந்தசாமி), பாரதி நடமாடிய பல நாட்கள் (இளங்கீரன்), உலக எழுத்தாளர்களுடன் 1வது மாநாடு (எச்.எம்.பி.முஹிதீன்), பிரம்மாக்களுடன் தாஷ்கந்தில் (பிரேம்ஜி), உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு (சில்லையூர் செல்வராசன்), உலக இலக்கியத்தில் பங்கேற்க ஏதுவாய் (க.கைலாசபதி), புதுமைப்பித்தன் இல்லத்தில் (பத்மா சோமகாந்தன்), இரண்டு அணிகள் உருவாகின (கா.சிவத்தம்பி), கவிதை பிறந்த கருங்கொடியூரில் (அ.ஸ.அப்துஸ்ஸமது), இனவாதிகளுக்கு மத்தியில் (நீர்வை பொன்னையன்), தமிழர் தலைநகரில் அறிஞருக்கு கௌரவம் (என்.சோமகாந்தன்), தேசியமும் ஒருமைப்பாடும் (மு.கனகராசன்), இலங்கை ஓரின நாடல்ல (லெ.முருகபூபதி), தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை (செ.மாணிக்கவாசகர்), 12 அம்சத் திட்டம் அமுலாகியிருந்தால் (ராஜ ஸ்ரீகாந்தன்), நாவலர் இயக்கம் (இ.முருகையன்), கூட்டுறவுப் பதிப்பகம் (காவலூர் ராசதுரை), கலை அரங்கில் (அந்தனி ஜீவா), காலச் சுவடுகள் (சபாஜெயராசா), பாரதியார் நூற்றாண்டு விழா(ஆசிரியர் குழு) ஆகிய படைப்பாக்கங்கள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18973. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 009329).

ஏனைய பதிவுகள்

12117 – வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கருணைமலர்: புனராவர்த்தன கும்பாபிஷேக மலர்-2003.

ஹேமா ஷண்முகசர்மா (பதிப்பாசிரியர்). முல்லைத்தீவு: அருள்மிகு ஸ்ரீ வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் தேவஸ்தானம், வற்றாப்பளை, திருத்திய 2வது பதிப்பு, 2003, 1வது பதிப்பு, 1978. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).