12767 – மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா 2000 சிறப்பு மலர்.

சாரல்நாடன் (இதழாசிரியர்). கண்டி: மத்திய மாகாண கல்வி (தமிழ்) கைத்தொழில் கால்நடை அபிவிருத்தி உணவு வர்த்தகம் வாணிப சுற்றுலாத்துறை இந்துக் கலாசார அமைச்சு, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).

(12), 13-98 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5 x 19 சமீ.

மத்திய மாகாண கல்வி (தமிழ்) கைத்தொழில் கால்நடை அபிவிருத்தி உணவு வர்த்தகம் வாணிப சுற்றுலாத்துறை இந்துக் கலாசார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்படும் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா மலையகப் பிரதேசத்தில் எழுச்சியுடன் ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதுண்டு. அவ்வகையில் 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற நிகழ்வினையொட்டி வெளியிடப்பெற்ற இம்மலரில் மலையக மக்களின் அடையாளங்கள் (மா.செ.மூக்கையா), இருபதாம் நூற்றாண்டில் மலையக மக்கள் (சோ.சந்திரசேகரன்), பெருந்தோட்ட மக்களும் சமூக நலன் சேவைகளும் (மு.சின்னத்தம்பி), பெருந்தோட்டப் பெண்கள் (லலிதா நடராஜா), தோட்ட லயங்களும் கொற்றேஜ் வீடுகளும் (நா.வேல்முருகு), இருபத்தோராம் நூற்றாண்டில் மலையகத் தமிழரின் அரசியல் எதிர்காலம் (அம்பலவாணர் சிவராஜா), மலையகக் கல்வி (தை.தனராஜ்), மலையகமும் ஆசிரியர் கல்வியும் (எஸ்.முரளீதரன்) ஆகிய எட்டு படைப்பாக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39878).

ஏனைய பதிவுகள்

14987 வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் பிரிவு மக்களின் வாழ்வும் வளமும்.

எஸ்.சிவானந்தராஜா. பண்டத்தரிப்பு: எஸ்.சிவானந்தராஜா, இந்துக் கல்லூரி வீதி, செட்டிகுறிச்சி, 1வது பதிப்பு, நவம்பர் 2019. (சங்கானை: சாய்ராம் பிரிண்டர்ஸ்). V, 71 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-38461-5-0.

12968 – இலங்கையின் இனப் பிரச்சனைக்கு அரசியல் திர்வு காணுவதில் அதிர் நோக்கும் அடிப்படை பிரச்னைகள்: சிறீ லங்காவின் வாளேந்தும் ஆண் சிங்கக் கொடியும் இலங்கைப் பிரஜைகளும்.

அ.சி.உதயகுமார். சுன்னாகம்: ஐளெவவைரவந ழக ர்ளைவழசiஉயட ளுவரனநைளஇ வேதராணியார் வளவு, உடுவில், 1வது பதிப்பு, ஏப்ரல் 2002. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). xxii, 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14732 அபோபிஸ்-2036 (விஞ்ஞான நாவல்).

எம்.எஸ்.எம். ஜிப்ரி. கொழும்பு 10: எஸ். கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2011. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (7), 8-56 பக்கம், விளக்கப்படங்கள்,

12339 – இந்து நாதம்: 1994.

கு.திவாகரன் (இதழாசிரியர்). கொழும்பு 4: இந்து மாணவர் மன்றம், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, நவம்பர் 1994. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 60 பக்கம், புகைப்படங்கள், விலை:

12931 – சுவடுகளும் நினைவுகளும்: சில பதிவுகள்.

செ.இளங்குமரன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பேராசிரியர் செ.இளங்குமரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி). 111 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: