12769 – மலையருவி: சிறப்புமலர்.

தமிழவேள் க.இ.க.கந்தசுவாமி (இதழாசிரியர்). கொழும்பு 6: இலக்கியக்குழு, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.7, 57ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 1994. (வத்தளை: வத்தளை பிரின்டர்ஸ், 17ஃ10, நீர்கொழும்பு வீதி).

106 பக்கம், அட்டவணை, புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5 x 18.5 சமீ.

மலையக மாணவர்களுக்காக 1993ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட நாவன்மை, மொழித்திறன் கட்டுரைகள், கவிதைகள் எழுதும் தமிழ்த்திறன் தேர்வுகள் தொடர்பான சிறப்பு மலர் இதுவாகும். இதில் முன்னுரை, கொழும்பு தமிழ்ச் சங்க வரலாறும் பணிகளும், சிறப்புச் செய்திகள், மாணவர் நல்லுரைகள், மாணவர் எழுத்துரைகள், மாணவர் கருத்துரைகள், மாணவர் பாமலர்கள், மாணவர் சிந்தனையுரைகள், மலையக மாணவர் தமிழ்த்திறன் தேர்வுப் பெறுபேறுகள், மலையக மாணவர் தமிழ்த் தேர்வுகளில் பரிசில் பெற்றவர் குறிப்புகள், மலையக மாணவர் தமிழ்த் தேர்வுகளும் விதிகளும், மலையக மாணவர் தமிழ்த்திறன் தேர்வுகள் அட்டவணை, நிகழ்ச்சி நிரல், நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள் ஆகிய 15 தலைப்புகளில் இம்மலர் தொகுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28208).

ஏனைய பதிவுகள்

14274 இலங்கையில் பின்காலனித்துவ அரசு.

ஜயதேவ உயன்கொட (ஆங்கில மூலம்), க.சண்முகலிங்கம் (தமிழாக்கம்). கொழும்பு: க.சண்முகலிங்கம், 1வது பதிப்பு, 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ. பேராசிரியர் நடராஜா சண்முகரத்தினம்