12771 – அநுபவங்களும் அநுமானங்களும்: கவிதை நூல்.

இரா.ஜெயக்குமார். உரும்பிராய்: கவிஞர் இரா.ஜெயக்குமார், 68ஃ8, சிவன் வீதி, உரும்பிராய் கிழக்கு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2018. (யாழ்ப்பாணம்: வைரஸ் கிரப்பிக்ஸ், இணுவில்).

xii, 96 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 21 x 14.5 சமீ., ISBN: 978- 955-43965-4-8.

இரா.ஜெயக்குமார், குப்பிழானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது உரும்பிராயில் வசித்து வருகிறார். கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்சிபெற்ற ஆசிரியராகிக் கல்வித்துறையில் இணைந்து சேவையாற்றி வருகின்றார். யாழ்ப்பாணத்து ஊடகங்களில் அவ்வப்போது இவரது கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. இவரது புனைபெயர் ‘மேகதூதன்’ என்பதாகும். இந்த நூலில் ‘தமிழே வாழ்க’ என்ற கவிதை தொடங்கி ‘நானும் கவிதையும்’ என்ற கவிதை ஈறாக 55 கவிதைகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்