12773 – ஆரண்ய வாசம்: கவிதைத் தொகுப்பு.

பாகீரதி கணேசதுரை (புனைபெயர்: மாவை பாரதி). தெல்லிப்பழை: கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (சுன்னாகம்: கிருஷ்ணா பிரின்டர்ஸ், வைத்திய கலாநிதி சுப்பிரமணியம் வீதி).

xiv, 102 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 20.5 x 15 சமீ., ISBN: 978- 955-43956-0-2. 72.

கவிதைகளைக் கொண்ட இக்கவிதைத் தொகுதி இளையோருடன், இறை யோருடன், உலகோருடன், உணர்வோருடன் ஆகிய நாலு பிரிவுகளின்கீழ் 894.8(1) தமிழ்க் கவிதைகள் நூல் தேட்டம் – தொகுதி 13 433 பிரித்துத் தரப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கேற்ற 29 கவிதைகளை ‘இளையோருடன்’ என்ற முதலாவது பிரிவு உள்ளடக்குகின்றது. ‘இறையோருடன்’ என்ற இரண்டாம் பிரிவில் 16 பக்திப் பாமாலைகள் இடம்கொண்டுள்ளன. ‘உலகோருடன்’ என்ற மூன்றாவது பிரிவில் ஆச்சார்ய தேவோபவ, சரண் புகுந்தாள், சரணாலயம், ஐந்திணை ஒழுக்கம், பொலியோ பொலி, விண்ணப்பம், அலைகளின் மேலே, மகாஜனத் தாய், நூற்றாண்டும் கடந்த அன்னை, பாராட்டும் தாயானவள், ஞானசாரதி, வளர்க சிங்கபுரி ஆகிய பன்னிரு கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ‘உணர்வோருடன்’ என்ற நான்காவது பிரிவில் பிரபஞ்ச கீதம், பலர் நடந்த பாதை, மலைத்தேன், இதயமற்ற இரவுகள், கற்களும் பூக்களாகும் என இன்னோரன்ன 17 உணர்வுக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

14024 உள்ளத்துள் உறைதல்.

கோகிலா மகேந்திரன். தெல்லிப்பழை: கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, மே 2011. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை). x, 168 பக்கம், விலை: ரூபா 400.,

12432 – யாழ்நாதம்: இதழ் 9-2003.

சிவகாமி அம்பலவாணர் (இதழாசிரியர்). கொழும்பு: பழைய மாணவிகள் சங்கம், யாழ். இந்து மகளிர் கல்லூரி- கொழும்புக் கிளை, 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). 72 பக்கம்,

14274 இலங்கையில் பின்காலனித்துவ அரசு.

ஜயதேவ உயன்கொட (ஆங்கில மூலம்), க.சண்முகலிங்கம் (தமிழாக்கம்). கொழும்பு: க.சண்முகலிங்கம், 1வது பதிப்பு, 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ. பேராசிரியர் நடராஜா சண்முகரத்தினம்

14298 மேல் நீரேந்துப் பரப்பு முகாமைத்துவ திட்டத்திற்கான பண்ணை மண் பாதுகாப்பு சிபார்சுகள்: பாதுகாப்பு முறைகளும் நியமங்களும்.

எச்.பி.நாயக்ககோராள (மூலம்), சீரங்கன் பெரியசாமி (தமிழாக்கம்). கொழும்பு: மேல் நீரேந்துப் பரப்பு முகாமைத்துவத் திட்டம், சுற்றாடல் இயற்கை வளங்கள் அமைச்சு, 30, லக்சபான மாவத்தை, ஜயந்திபுர, பத்தரமுல்லை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை.

12935 – பத்மம் (பேராசிரியர் எஸ்.பத்மநாதன் சேவை நயப்பு மலர்).

இரா.வை.கனகரத்தினம். எஸ்.ராஜகோபால், ப.புஷ்பரட்ணம், வி.மகேஸ்வரன் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பவானி பதிப்பகம், புத்தூர் கிழக்கு, புத்தூர், 1வது பதிப்பு, 2004. (சென்னை 600035: தமிழ் நிலம், 33, வேங்கடநாராயணன் சாலை, நந்தனம்). xxxx, 335 பக்கம்,