12773 – ஆரண்ய வாசம்: கவிதைத் தொகுப்பு.

பாகீரதி கணேசதுரை (புனைபெயர்: மாவை பாரதி). தெல்லிப்பழை: கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (சுன்னாகம்: கிருஷ்ணா பிரின்டர்ஸ், வைத்திய கலாநிதி சுப்பிரமணியம் வீதி).

xiv, 102 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 20.5 x 15 சமீ., ISBN: 978- 955-43956-0-2. 72.

கவிதைகளைக் கொண்ட இக்கவிதைத் தொகுதி இளையோருடன், இறை யோருடன், உலகோருடன், உணர்வோருடன் ஆகிய நாலு பிரிவுகளின்கீழ் 894.8(1) தமிழ்க் கவிதைகள் நூல் தேட்டம் – தொகுதி 13 433 பிரித்துத் தரப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கேற்ற 29 கவிதைகளை ‘இளையோருடன்’ என்ற முதலாவது பிரிவு உள்ளடக்குகின்றது. ‘இறையோருடன்’ என்ற இரண்டாம் பிரிவில் 16 பக்திப் பாமாலைகள் இடம்கொண்டுள்ளன. ‘உலகோருடன்’ என்ற மூன்றாவது பிரிவில் ஆச்சார்ய தேவோபவ, சரண் புகுந்தாள், சரணாலயம், ஐந்திணை ஒழுக்கம், பொலியோ பொலி, விண்ணப்பம், அலைகளின் மேலே, மகாஜனத் தாய், நூற்றாண்டும் கடந்த அன்னை, பாராட்டும் தாயானவள், ஞானசாரதி, வளர்க சிங்கபுரி ஆகிய பன்னிரு கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ‘உணர்வோருடன்’ என்ற நான்காவது பிரிவில் பிரபஞ்ச கீதம், பலர் நடந்த பாதை, மலைத்தேன், இதயமற்ற இரவுகள், கற்களும் பூக்களாகும் என இன்னோரன்ன 17 உணர்வுக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

14571 இப்படியும் (தேர்ந்த கவிதைகள்).

அழ.பகீரதன். யாழ்ப்பாணம்: அழ.பகீரதன், தேசிய கலை இலக்கியப் பேரவை, செருக்கற்புலம், சுழிபுரம், 1வது பதிப்பு, நவம்பர் 2012. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). 98 பக்கம், விலை: ரூபா 200.00, அளவு:

14773 நதிமேல் தனித்தலையும் சிறுபுள்.

தேவகாந்தன். சென்னை 600077: நற்றிணை பதிப்பகம், பிளாட் எண் 45, சாய் கவின்ஸ் குமரன் அபார்ட்மென்ட்ஸ், தேவி கருமாரியம்மன் நகர், கிருஷ்ணா நகர் பிரதான சாலை, நூம்பல், ஐயப்பன் தாங்கல், 1வது பதிப்பு, ஜனவரி