வேலணையூர் சுரேஷ் (இயற்பெயர்: இராமச்சந்திரன் சுரேஷ்). யாழ்ப்பாணம்: வர்ணம் கிரியேஷன்ஸ், அளவெட்டி, 1வது பதிப்பு, நவம்பர் 2015. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ், 103, பலாலி வீதி).
xxvii, 100 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5 x 4.5 சமீ., ISBN: 978-955-42692-0-0.
பல்வேறு சமூகப் பிரச்சினைகளைத் தனது கவிதைகள் மூலம் வெளிக்கொண்டுவரும் சுரேஷ், அவற்றை கேள்விக்குட்படுத்துகின்றார். முள்ளிவாய்க்கால் அவலத்தை எண்ணிக் கவலையுறும் இக்கவிஞன் ‘உயிர்விலை’ என்ற கவிதையில் அதனை வேதனையுடன் விளக்குகின்றார். நவீன இலத்திரனியல் சாதனங்களால் தொலைந்துபோன எமது வாழ்வு முறையையும் பண்பாட்டு விழுமியங்களையும்கூடக் கவிஞர் எடுத்துக்காட்டத் தவறவில்லை. வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் வழங்கும் நன்னூல் விருதினைப் பெற்றது.