12779 – மனவானின் மழைத்துளிகள்: கவிதைத் தொகுப்பு.

வேலணையூர் சுரேஷ் (இயற்பெயர்: இராமச்சந்திரன் சுரேஷ்). வேலணை: தாய்சக்தி கலைக்கூடம், புளியங்கூடல், 1வது பதிப்பு, மார்கழி 2016. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிறின்டேர்ஸ்).

xviii, 82 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5 x 11.5 சமீ., ISBN: 978-955-42692-2-4.

வேலணையூர் சுரேஷ் வழங்கியுள்ள கவிதைகள் கவிநயங்களுடன் மட்டும் நின்றுவிடாமல் தான் சார்ந்த மக்களின் சிந்தனைகளை நேர்வழியில் தூண்டி விடவும் உதவுகின்றன. வாழ்வியலின் யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு, அவர்களில் பலர் வாழும் பயனற்ற பகட்டு வாழ்விலிருந்து அவர்களைப் பிரித்தெடுத்து, யதார்த்த உலகினுள் கொண்டுசென்று சேர்ப்பதற்கான புதிய பாதையினை இக்கவிதைகள் உயிர்ப்புடன் காட்டமுனைகின்றன. இளைஞர் எழுச்சிக்கு உலக அரங்கில் முன்னர் பெயர்பெற்ற யாழ்ப்பாண மண்ணில் இன்று மலிந்துள்ள இளைஞர்களின் குற்றம் பயில் வாழ்வுமுறைகளைக் கண்டு துயருறும் போக்கும் சில கவிதைகளின் வழியே வருத்துகின்றன.

ஏனைய பதிவுகள்

14276 கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை.

சித்ரா றஞ்சன் த சில்வா (விசாரணை ஆணைக்குழுவின் தலைவர்). கொழும்பு: கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க விசாரணை ஆணைக்குழு, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). xx, 433