கந்தையா ஸ்ரீகணேசன். வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, ஜனவரி 2018. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xxv, 63 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22 x 14.5 சமீ., ISBN: 978-955-42913-0-0.
தென்னாசிய நாடுகளினிடையே பொதுவான பண்பாட்டு அம்சங்கள் நிறைய உள்ளன. இந்நாடுகள் காலனித்துவப்பிடிக்குள் அகப்பட்டு தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, தம் அடையாளங்களைத் தொலைக்கும் அளவுக்குப் போய் மீண்டவை. இக்கவிதைகளை மொழிபெயர்ப்பிலாவது படிக்கும் நாம், இவை தரும் அனுபவம் எமது சொந்த அனுபவங்களுக்குச் சற்றேனும் குறைந்தவை அல்ல என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது. அப்பொதுமைகளை அந்தந்த நாட்டுக் கவிஞர்களின் படைப்பாக்கங்களிலே காணமுடிகின்றது. மொழிபெயர்ப்பு அனுபவம் மிகப்பெற்ற ஆசிரியர், தென்னாசிய இலக்கிய சார்க் மாநாடுகளில் பங்குபற்றிய வேளையில் தான் சுவைத்து அனுபவித்த கவிதைகளின் மொழிபெயர்ப்புகளையும் புதிதாக எழுதிச் சேர்த்த மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் சேர்த்து 30 கவிதைகளை இந்நூலில் தந்துள்ளார். ஆங்கில மொழியில் தான் வாசித்த மூலக்கவிதைகளையும் இந்நூலில் இணைத்துள்ளார். மொழிபெயர்ப்புத்துறையில் ஆர்வம் உள்ளவர் களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் பயனுள்ள நூல். இணுவிலைப் பிறப்பிட மாகக் கொண்ட கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்.