அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, மே 2017. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசுவாமி கோவில் வீதி).
73 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21 x 14.5 சமீ., ISBN: 978-955-7654-14-0.
தனது மனைவியின் இறந்த உடலை எரிக்கின்ற சிதையில் பாய்ந்து உடன்கட்டைஏறி உயிரை மாய்த்துக்கொண்ட ஒரு கதையை ஆசிரியர் நாடகமாக்கித் தந்துள்ளார். இதன் மூலக்கதை செ.மெற்றாஸ் மெயில் தொகுத்து வெளியிட்ட வேலப்பணிக்கர் ஒப்பாரி என்ற நூலில் உள்ளது. வன்னி மண்ணின் பண்பாட்டைச் சிறந்த முறையில் காட்சிப்படுத்தும் நோக்கில் முன்னர் இதே தலைப்பில் வானொலி 894.8(11) மொழிபெயர்ப்புக் கவிதைகள் ஃ 894.8(2) தமிழ் நாடகங்கள் 438 நூல் தேட்டம் – தொகுதி 13 நாடகமாக எழுதியிருந்தார். தற்போது அதனை மேடை நாடக வடிவிற்கு மாற்றியுள்ளார். குறும்படமாகத் தயாரிக்கும் வகையில் குறிப்புகளையும், நாட்டார் பாடலின் அடிப்படையில் ஆனை கட்டிய அரியாத்தை கதையையும் இந்நூலில் சேர்த்துள்ளார். வேலப்பணிக்கர் ஒப்பாரியும் நூலின் பிற்பகுதியில் சேர்க்கப் பட்டுள்ளது.