12784 – சாபமும் சக்கரவர்த்தியும்: நாடகங்கள்.

பாகீரதி கணேசதுரை (புனைபெயர்: மாவை பாரதி). சென்னை 600 094: பூவரசி வெளியீடு, 20/2இ சக்காரியா காலனி, முதலாவது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, மே 2016. (சென்னை 600 094: பூவரசி வெளியீடு, 20/2இ சக்காரியா காலனி, முதலாவது தெரு, சூளைமேடு).

104 பக்கம், விலை: இந்திய ரூபா 120., அளவு: 21.5 x 14 சமீ., ISBN: 978-93-81322- 37-6.

மைந்தனின் மாட்சி (காத்தவராயன் சிந்துநடைக் கூத்தின் வடிவில் அமைந்த விசேட கூத்து), சரணாலயம் (மூவேந்தர் கரங்களில் தமிழன்னை வளர்ந்ததையும் மன்னர்களின் போரில் அவள் கலங்கித் துடித்ததையும் பின் அனைவரும் இணைந்து தமிழ் வளர்த்த வரலாற்றையும் கூறும் நாட்டிய நாடகம்), அறம் வளர்ப்போம் (சிறுவர் நாடகம்), துர்க்காதேவி சரணம் (சமூக நாடக வரிசையில் துர்க்காபுரம் தேவஸ்தானத்தின் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் மறைவையொட்டி இல்லச்சிறார்கள் அவரது இழப்பினை தாங்காது தவித்த காலகட்டத்தில் ஆற்றுப்படுத்தல் வடிவமாக உருவாக்கப்பட்டது), எமதர்மராஜன் நிவாரணம் பெறுகிறார் (போர்க்காலச் சூழலிலே இலங்காபுரி வந்த நாரதரும் எமதர்மராஜனும் மேற்கொண்ட யாத்திரையில் அனைத்தும் இழந்து நிவாரணம் கோரி வைகுண்டம் சென்ற கதை நகைச்சுவையாகச் சொல்லப்படுகிறது), மேற்கில் தோன்றும் உதயம் (ஒரு சிறுவனின் மனதில் எழும் மண்பற்றின் வீரியம் பற்றிக் கவிதை நடையில் கூறுவது), நிழலைத் தேடும் நிஜங்கள் (சிறுவர் துன்புறுத்தலுக்கெதிரான பிரச்சார வடிவமாக சிறுவர் பாதுகாப்புச் சபையின் பரப்பரைக்கேற்ப தயாரிக்கப்பட்டது), சாபமும் சக்கரவர்த்தியும் (இராமன் வனம் புகுந்த காட்சியை விளக்கும் பா நாடகம்), தலைவன் வரவுக்காய் (சங்ககாலத்தின் தமிழர் சால்பாகிய ஐந்திணை ஒழுக்கம் பற்றி இடம்பொருள் தொழில்ரீதியாகச் சுட்டிநிற்கும் நாட்டிய நாடகம்), தென்றலே மெல்ல வீசு (போர்க்காலப் படைப்பான இந் நாட்டிய நாடகம், வீரமறத் தமிழன்னையின் வீர உணர்வையும் தமிழரின் இனிய காதல் உணர்வையும்கொண்டு புனையப்பட்டது), விபரீத ஆசை (சிறுவர் நாடகம்), அத்யந்த பக்தி (இசை நாடக வடிவம்)ஆகிய பன்னிரு நாடகங்கள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Papier De Royal Vegas Salle de jeu

Ravi Does Salle de jeu Absolue Coupe Free Garage? Jeu Dans Salle de jeu Royal Vegas Faq Interrogation Et Explications Via L’utilisation Leurs Casinos Un

16089 மன்னன் குறிச்சி நெல்லிக் கிணற்றடி தான்தோன்றி கந்தசுவாமி கோவில்.

க.இராசரத்தினம்.  மிருசுவில்: நெல்லிக்கிணற்றடி தான்தோன்றி கந்தசுவாமி தேவஸ்தான வெளியீடு, மன்னன் குறிச்சி, மிருசுவில்  வடக்கு, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xxii, 204 பக்கம்,