12787 – பரிசுபெற்ற நாடகங்கள்: வடமோடி நாட்டுக்கூத்துகள்.

முருங்கன் செ.செபமாலை (புனைப்பெயர்: கலைஞர் குழந்தை). மன்னார்: நானாட்டான் பிரதேச கலாச்சாரப் பேரவை, உதவி அரசாங்க அதிபர் பணியகம், நானாட்டான், 1வது பதிப்பு, 1997. (மன்னார்: வாழ்வுதயம் அச்சகம்).

(9), 100 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5 x 15 சமீ.

மன்னார் மாவட்டம், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வசித்து வரும் செபஸ்தியான் செபமாலை அவர்கள் ‘குழந்தை’ எனும் பெயரில் புகழ்பூத்த ஒரு நாடகக் கலைஞர். நாட்டுக்கூத்து, மரபு நாடகங்கள், வில்லுப்பாட்டு, இசை நாடகங்கள், நாடகநெறியாள்கை, கவிதை, பாடல் போன்ற பல்துறைகளிலும் கலையாற்றல் மிக்கவர். 08.03.1940இல் முருங்கனில் பிறந்த செபமாலை, மன்னார் முருங்கன் மகாவித்தியாலயத்தில் பாடசாலைக் கல்வியைப் பெற்றார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்ற இவர், கல்லூரி ஆசிரியராகத் தனது தொழிலை ஆரம்பித்து 40 வருட சேவையின் பின்னர் ஓய்வுபெறும் போது முதலாந்தர அதிபராகப் பதவி வகித்து வந்தார். இவரின் முதல் நாடகம் 1964ஆம் ஆண்டில் மேடையேறியது. 1964ஆம் ஆண்டு இவரால் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை நாடகங்களையும், இதர கலை நிகழ்ச்சிகளையும் வழங்கி வரும் ‘முத்தமிழ் கலா நாடகமன்றம்’ இவரது ஆற்றலுக்கும், உழைப்புக்கும் சாட்சியாக விளங்கிவருகின்றது. இவரது முதல் ஆக்கமான ‘அறப்போர் அறைகூவல்’ எனும் கவிதை இலங்கை வானொலியில் 1963ஆம் ஆண்டு முதலில் ஒலிபரப்பானது. 1998ல் அரச இலக்கிய விழாவில் இவரது ‘பரிசு பெற்ற நாடகங்கள்’ நூலுக்குச் சாஹித்திய விருது வழங்கப்பட்டது. இந்நூலில் ‘வீரத்தாய்’ (புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதையொன்றை மூலமாகக் கொண்ட நாடகம்), ‘கல்சுமந்த காவலர்கள்’ (தமிழகத்தில் சேர மன்னனின் ஆட்சிக் காலத்தில் கனக விஜயர்கள் கண்ணகி சிலைக்காகக் கல்சுமந்த கதை), ‘இணைந்த உள்ளம்’ (மதன நாட்டு மன்னன் மகள் எழிலரசி, அவளது ஆசிரியர் மணிவண்ணனுடன் கொள்ளும் காதல் அவனைச் சிரச்சேதம் செய்யும் அளவுக்குச் சென்றும் உள்ளங்கள் இணைந்த காதல்கதை), ‘யார் குழந்தை’ (பரிசுத்த வேதாகமத்தில் சாலமன் அரசனின் காலத்தைய இருதாய்கள் ஒரு பிள்ளைக்கு உரிமைகொண்டாடிய வேளை உண்மைத்தாயைக் கண்டறிய மன்னன் சாலமன் கண்ட யுக்தி இங்கு கதையாகின்றது), ‘வீரனை வென்ற தீரன்’ (பரிசுத்த வேதாகமத்தில் சவுல் மன்னனின் ஆட்சியில் வீரனான கோலியாத்தை போரில் வென்ற தாவீதுவின் கதை) ஆகிய ஐந்து நாடகங்களை இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 30453).

மேலும் பார்க்க: 12713,12866.

ஏனைய பதிவுகள்

7 Euro ofwel 70 spins gratis!

Volume Gaan acteurs zonder Holland optreden te Winorama Casino? Winorama Winorama opsporen we zeker wieg offlin gokhuis maar het ben nie onz kanshebber. Hoedanig plausibel

16683 நிறமில்லா மனிதர்கள்.

பூங்கோதை (இயற்பெயர்: கலா ஸ்ரீரஞ்சன்). தமிழ்நாடு: பரிதி பதிப்பகம், 56 சீ/128, பாரத கோயில் அருகில், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டம் 635 851, 1வது பதிப்பு, நவம்பர் 2021. (சென்னை 600 017: மணி