12788 – ஈடிப்பஸ் வேந்தன்: கிரேக்க நாடகம்.

சொவக்கிளிஸ் (கிரேக்க மூலம்), மொழிமாறன் (தமிழாக்கம்). கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, வசந்தம், 44, 3வது மாடி, மத்திய சந்தைக் கூட்டுத் தொகுதி, இணை வெளியீடு, சென்னை 600002: சவுத் விஷன், இல. 6, தாயார் சாஹிப் 2ஆவது சந்து, 1வது பதிப்பு, ஜுன் 2000. (சென்னை 600005: மணி ஆப்செட்).

62 பக்கம், விலை: இந்திய ரூபா 30.00, அளவு: 21 x 13 சமீ.

கிரேக்க நாடகாசிரியர் சொ‡வக்கிளிஸ் எழுதிய அவலச்சுவைமிக்க கிரேக்க நாடகம் இது. இந்நாடகத்தின் முக்கியத்துவம் என்னவெனில், பிரபல தத்துவஞானி அரிஸ்ரோற்றில், அவல நாடகத்தின் இலக்கணத்தை வகுப்பதற்கு இந்த நாடகத்தையே முன்மாதிரியாகக் கொண்டார் என்பது வரலாறு. பெரும்பாலான தொல்சீர்க் கிரேக்க அவலங்கள் போலவே சொ‡வக்கிளிசின் இந்தப் படைப்பும் விதியின் வலிமையையும் மனிதர்களின் திண்டாட்டங்களையும் உணர்த்துகின்றது. எதிர்காலத்தை முன்கூட்டியே அறியவேண்டும் என்று மனிதர்கள் ஆசைப்படு கின்றனர். தெய்வ வாக்கு, குறி பார்ப்பு, ஆரூடம், முதலானவற்றில் நம்பிக்கை வைக்கின்றனர். இவை மூலம் கிடைக்கும் எதிர் உரைகளால் வருங்காலத்தை வசப்படுத்தி விடலாம் என்று விரும்பி முயல்கின்றனர். ஆனால் இவை எவையும் எதிர்பார்த்த நற்பலனைத் தருவதிற் பெரிதும் வெற்றி தருவதில்லை. இதுவே நாடகத்தின் கருவாகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28363).

ஏனைய பதிவுகள்

14421 மொழிபெயர்ப்பு மரபு.

எப்.எக்ஸ்.சி.நடராஜா (இயற்பெயர்: பிரான்சிஸ் சேவியர் செல்லையா நடராசா). கொழும்பு: கலைமகள் கம்பெனி, 124 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 1954. (சென்னை 1: ஸ்ரீமகள் அச்சகம்). 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14970 நந்திக் கடல் பேசுகிறது: பின் போர்க்காலமும் களப் பதிவுகளும்.

ஜெரா (தொகுப்பாசிரியர்). இலங்கை: ஊறுகாய் மற்றும் வொய்ஸ் எண்ணிம தளம், 2வது பதிப்பு 2020, 1வது பதிப்பு, 1919. (அச்சகவிபரம் தரப்படவில்லை). (10), 277 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 21×14.5 சமீ.,